ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. கன்னடத்தில் உருவான இப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். 16 கோடியில் இத்தனை தரமான படத்தை எடுக்க முடியும் என்பதை சாதித்து காட்டியுள்ளனர். பாராட்டுக்கள்!!!   


 



 


ரிஷப் ஷெட்டிக்கு சுற்றி போட வேண்டும் :


ரிஷப் ஷெட்டி அவரே இயக்கி இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவரின் அபாரமான நடிப்பை பாராட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலமாகவும் நேரடியாகவும் சென்று வாழ்த்தி வருகிறார்கள். "காந்தாரா" படத்தின் தமிழ் டப்பிங் திரைப்படம் இன்று தமிழில் வெளியானது. படத்தில் ரிஷப் என்ட்ரியே திரையரங்குகளை தெறிக்கவிடுகிறது. படத்தில் கூஸ் பம்ப்ஸ்  காட்சிகளால் ரசிகர்கள் ஆர்பரிக்கிறார்கள். படத்தில் அன்பு, காமெடி, ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு முழு நீள எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக சாதித்து காட்டியுள்ளார் ரிஷப் ஷெட்டி. அவரின் சிறப்பான நடிப்பு படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்று விட்டது. 


 


தரமான திரைப்படம் :


கன்னட திரையுலகில் வசூலை வாரிக்குவித்துள்ள "காந்தாரா" திரைப்படம் ஒரு தரமான திரைப்படமாக விமர்சங்களை பெற்று வருகிறது. கன்னட திரையுலகில் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அமோக வெற்றியை பெரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை. அஜனீஷ் இசை மற்றும் அரவிந்த்.எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு படத்தை வேறு ஒரு லோகத்திற்கு எடுத்து சென்று விட்டது. 


 






 


நேரில் சென்று வாழ்த்திய நடிகர் கார்த்தி :


பல பிரபலங்களின் பாராட்டை பெற்று வரும் "காந்தாரா" திரைப்படத்தை நடிகர் தனுஷ், ராணா டகுபதி, பிரபாஸ் என பலரும் பாராட்டி வரும் வகையில் நடிகர் கார்த்தி ரிஷப் ஷெட்டியை நேரில் சென்று பார்த்து தனது பூரிப்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார். கார்த்தி - ரிஷப் ஷெட்டி சந்திப்பு வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும் என இந்த சிந்தனை நிச்சயமாக பாரட்டப்பட வேண்டும். 


 







தென்னிந்திய சினிமாவிற்கு இது ஒரு பொற்காலமே. அடுத்தடுத்து வெளியான பல தரமான திரைப்படங்கள் சர்வதேச அளவில் நமது தென்னிந்திய சினிமா அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.