நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் தலைவரான கமல்ஹாசன் கடந்த வாரம் மாநிலங்களவையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு 'தமிழ் பிச்சை எடுக்க உதவாது' என்று அவர் பேசியது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல் அண்மையில் கல்லூரி நிகழ்வொன்றில் கமல் மாணவர்களிடையே சென்சார் போர்ட் குறித்த தனது விமர்சனத்தை கேலியாக முன்வைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது 

Continues below advertisement

சென்சார் போர்ட் பற்றி கமல் 

ஜனநாயகன் பட சென்சார் சர்ச்சையைத் தொடர்ந்து மத்திய சென்சார் போர்டு மீது திரைத்துறை மற்றும் ரசிகர்களிடையே பெரியளவில் அதிருப்தி இருந்து வருகிறது. இந்தியில் இஸ்லாமிய மதத்தினரை தவறாக சித்தரிக்கும் பல்வேறு படங்களுக்கு எந்த வித ஆட்சேபனமும் இல்லாமல் தணிக்கை சான்றிதழ் வழங்கும் தணிக்கை வாரியம் தென் இந்திய படங்கள் குறிப்பாக தமிழ் திரைப்படங்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அரசு , மதம் மற்றும் கலாச்சார கட்டமைப்புகளை கேள்வி கேட்கும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வாங்குவது பெரும் சவாலானதாக இருந்து வருகிறது. இதனால் படைப்பாளிகளின் சுதந்திரம் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து என பலர் கூறுகிறார்கள்

வுமஸ் கிறிஸ்டியன் காலேஜில் கமல் காந்தி பற்றிய தனது ஆவணப்படத்தை திரையிட்டார். இந்த திரையிடலின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆவணப்படம் பாதியில் நின்றுவிட்டது. சூழலை சமாளிக்க கமல் ' சென்சார் போர்டா ? இல்ல தடங்கலா?" என்று கூறினார். இதற்கு மாணவர்கள் இடையே பெரும் ஆதரவு கிடைத்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது 

Continues below advertisement