காட்சிக்கு காட்சி வித்தியாசம், அதிலும் புதிய ஆளவந்தானாய் ஒரு வில்லத்தனம், நடிப்பிலும் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் இது அத்தனையும் கொண்ட மொத்த உருவமாய் உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று. 


நடன ஆசிரியர் மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை-திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைக் கொண்ட நடிகர் கமல்ஹாசனுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அவரது ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து:


தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்!






நடிகர் பிரேம்ஜி:


 



சன் பிக்சர்ஸ் :






ஸ்டூடியோ கீரீன் :






விருதுகள் :


பல்வேறு மாநில அரசுகளின் விருதுகள், பல்கலைக்கழகங்களின் விருதுகளை வென்றுள்ளார். 
மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள்  மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்களுக்கு வாங்கியிருக்கிறார்.


சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது திரைப்படம் - களத்தூர் கண்ணம்மாவில் நடித்தற்காக பெற்றார்.


சிறந்த மாநில மொழி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர் மகன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் என்ற முறையில் கமல்ஹாசனுக்கு ஒரு இந்திய தேசிய விருது கிடைத்தது. 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், 50 வருடம் திரைத்துறையில் பணியாற்றியமைக்காக கேரளா அரசின் சிறப்பு விருது, பத்மஸ்ரீ விருது (1990), சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம் (2005), பத்ம பூஷண் விருது (2014) ஆகியவற்றை வென்றுள்ளார்.


தென் இந்திய நடிகர்களிலேயே முதன் முதலாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பெருமையை பெற்றுள்ளார் கமல்.