'வெற்றிமாறன் சார் ப்ளீஸ்! நாம தமிழ் படம் பண்ணலாம்' குழந்தைபோல கேட்ட ஜூனியர் என்.டி.ஆர்.

வெற்றி மாறன் இயக்கத்தில் நேரடி தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவரது நடிப்பு மற்றும் நடனத்திற்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் ஆர்ஆர்ஆர் படம் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் தேவாரா என்ற படத்தில் நடித்துள்ளார்.                       

Continues below advertisement

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய ஜூனியர் என்டிஆர் தனது ஆசையை கூறினார். அதில் அவர் பேசியதாவது, “ நான் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனரிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். வெற்றி மாறன் சார். ப்ளீஸ். ஒரு படம் என்னை வைத்து பண்ணுங்க. நேரடியா தமிழில் படம் பண்ணலாம் சார். அதை தெலுங்கில் டப் பண்ணலாம் சார்.”

இவ்வாறு அவர் பேசினார்.

இதைக்கேட்ட அங்கிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். .பொல்லாதவன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான வெற்றி மாறன் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை படம் மூலமாக இந்திய அளவில் மிகப்பெரிய இயக்குனராக வளர்ந்துள்ளார்.

தற்போது விடுதலை 2ம் பாகம், வாடிவாசல் படங்களில் கவனம் செலுத்தி வரும் வெற்றி மாறன் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால், சில காரணங்களால் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற இயலவில்லை.

இதுதொடர்பாக, வெற்றி மாறன் ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அசுரனுக்கு பிறகு ஊரடங்கு காலத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நானும் பேசினோம். எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. அது நீண்ட காலமாகிவிட்டது என்று கூறியதும் தற்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரிடம் தனது ஆசையை நேரடியாக வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவாரா படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் இணைந்து சையப் அலிகான், ஜான்வி கபூர், ஸ்ருதி மராத்தே, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், சாக்கோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் இந்த படங்களை இணைந்து தயாரித்துள்ளனர்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் உருவாகியுள்ளது.

                                              

Continues below advertisement
Sponsored Links by Taboola