Actor John Vijay : ஜாதிப்பெயரைச் சொல்லி பேசிய நடிகர் ஜான் விஜய்.. சர்ச்சையும், பரபரப்பும்

டிமாண்டி காலணி சிறப்பு திரையிடலில் நடிகர் ஜான் விஜய் சாதிப் பெயர்களை வெளிப்படையாக பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Continues below advertisement

ஜான் விஜய்

பல்வேறு தமிழ் படங்களில் வில்லனாகவும் காமெடி நடிகராகவும் நடித்து வருபவர் நடிகர் ஜான் விஜய்.

Continues below advertisement

ஓரம் போ , மெளன குரு , சார்பட்டா பரம்பரை , கலகலப்பு உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்களால் பேசப்பட்டவை. தற்போது அருள்நிதி நடித்துள்ள டிமாண்டி காலணி 2 படத்தில் ஜான் விஜய் நடித்துள்ளார். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.

இப்படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்துகொண்டபோது நடிகர் ஜான் விஜய் படக்குழுவினருடன் பேசும்போது சாதிப் பெயர்களை குறிப்பிட்டு சகஜமாக சிரித்துக் கொண்டு பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

ஜான் விஜய் வைரல் வீடியோ

இந்த வீடியோவில் ஜான் விஜய் , தனது மனைவி மாதவி இளங்கோவன் மற்றும் நடிகர் அருண் பாண்டியன் உள்ளிட்ட தனது நண்பர்களுடன்  புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது ”நீங்க தேவர் சமுதாயத்திற்கு பக்கம் நில்லுங்க.. நாங்க நாடார்ஸ் சமுதாயம் எல்லாம் ஒன்றாக நிற்கிறோம்” என்று சிரித்துக் கொண்டு சகஜமாக பேசியுள்ளார்.

ஆதிக்க சாதிய மனநிலைக்கு எதிராக செயல்பட்டு வரும் இயக்குநர் ரஞ்சித் இயக்கிய சார்பட்டா படத்தின் ஜான் விஜய் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இந்த வீடியோவில் அவர் பேசியதை  பார்த்தபின் சமூக வலைதளங்களில் அவருக்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

Continues below advertisement
Sponsored Links by Taboola