யுவராஜ் சிங் பயோபிக்கில் நடிக்க தயார் என்று பிரபல நடிகர் ஜெயம் ரவி பேசியிருக்கிறார்.
இது குறித்து சினிமா விகடன் யூடியூப் சேனலில் பேசிய ஜெயம் ரவி, “எனக்கு சின்ன வயசுல இருந்தே ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் அதிகமா இருந்துச்சு. ஸ்கூல ஃபுட் ஃபால், கிரிக்கெட், வாலிபால் மூன்றிலுமே நான்தான் கேப்டன். இது மட்டுமல்ல ஈட்டி எறிதல்ல ரெக்கார்டு ப்ரேக்கிங் பண்ணிருக்கேன். நிறைய பேர் என்னிடம் யுவராஜ் சிங்கா நடிக்கணும்னு கேட்ருக்காங்க. நான் யுவராஜ் சிங் மாதிரி இருக்கேன்னு சொல்லிருக்காங்க. அவரு ரொம்ப பெரிய ஃப்ளேயர். நிறைய சாதனைகள் பண்ணிருக்காரு. அந்தப்படம் வந்தா நிச்சயம் பண்ணலாம்.” என்று பேசியிருக்கிறார்.
ஜெயம்ரவி தற்போது 'பூலோகம்' படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் அகிலன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் ஜெயம் ரவி கப்பல் பொறியாளராக நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1 யிலும் இவர் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்தப்படம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.