ஜெயம் ரவி - ஆர்த்தி
ஹாலிவுட்டில் ஜானி டெப் ஆம்பர் ஹெட் சர்ச்சையைக்கு நிகராக வளர்ந்து வருகிறது நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து சர்ச்சை. தனது பிறந்தநாளுக்கு முன்பாக தனது மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தார். இருதரப்பினரின் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்திருந்த நிலையில் ஆர்த்தி அதற்கு மாறாக இந்த விவாகரத்தில் ஜெயம் ரவி தன்னை கலந்தாலோசிக்கவில்லை என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கெனிஷா என்கிற பாடகியுடன் ஜெயம் ரவி காதல் உறவில் இருப்பது தான் இந்த விவாகரத்திற்கு காரணம் என வதந்திகள் பரவின. இதுகுறித்து ஜெயம் ரவி நேற்று செப்டம்பர் 21 ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். தன் தனிப்பட்ட பிரச்சனைகளில் யாரையும் சேர்த்து பேச வேண்டாம் .வாழு வாழவிடு என ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். தற்போது அதிர்ச்சியளிக்கும் மற்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மனைவி ஆர்த்தியிடம் சிக்கிய இன்ஸ்டா கணக்கு
ஜெயம் ரவியின் இன்ஸ்டா கணக்கை தொடக்க காலத்தில் இருந்தே அவரது மனைவி ஆர்த்தியே கையாண்டுள்ளார். இருவருக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சனைகளுக்குப் பின் தனது இன்ஸ்டா கணக்கை ஜெயம் ரவி கேட்டும் ஆர்த்தி அதை மறுத்துள்ளார். தனது படங்களின் ப்ரோமோஷன்களுக்கு கூட ஜெயம் ரவி தனது இன்ஸ்டா கணக்கை அனுகமுடியாத நிலை ஏற்பட்டது. விவாகரத்து அறிவித்த பின் ஜெயம் ரவி மெட்ட நிறுவனத்திடம் முறையாக கோரிக்கை வைத்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் கணக்கை திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவு திரையுலகில் அனைவரும் பார்த்து பொறாமை படும் தம்பதிகளாக இருந்த ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து சர்ச்சை நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை எடுத்து வருகிறது. இது பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் அதே அளவிற்கு வருத்தத்தை அளிப்பதும் உண்மையே.