பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹ்ருத்திக் ரோஷன்; அசத்தல் நடிப்பு, வேற லெவல் நடனம், பல விருதுகள், வானளவு சம்பளம் என கொடிகட்டி பறக்கும் கதாநாயகர் என்றே இவரை சொல்லலாம்.
ஹ்ருத்திக் ரோஷன், 1980 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். 2000 இல் வெளிவந்த "கஹோ நா.. பியார் ஹை" திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் அளவில் மாபெரும் வெற்றி பெற்று பல விருதுகளையும் வென்று குவித்தது; அதன்பின் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படமான "கோயி மில் கயா" திரைப்படம் இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த திரைப்படத்திற்காக அவர் இரண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விக்ரம் வேதா; தமிழில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மாதவன் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதாவின் ரீமேக்காக வெளியான இந்த திரைப்படத்தில், ஹ்ருத்திக் ரோஷன் விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் மாபெரும் ஹிட் அடித்த இந்த திரைப்படம் ஹிந்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. நடிப்பு மட்டுமின்றி அவரது ஃபிட்னஸ், நடனம் என அனைத்தும் பெயர் போனவர் ஹ்ருத்திக் ரோஷன். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘ போகலாம்’ என்ற கேப்ஷனோடு, சட்டையை தூக்கி தனது வயிற்றுப் பகுதியில் இருக்கும் சிக்ஸ் பேக்ஸை வெளிகாட்டுவது போல் போஸ் கொடுத்த போட்டோவை பகிர்ந்தார். அவரது ஃபிட்னஸை பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர் ரசிகர்கள். மேலும், இவர் சிறந்த இன்ஸ்பிரேஷன் என்றும் இவரை போல் உடலை பராமரிக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 48 வயதான இவர் இளமையான தோற்றம் உடையவர். ஹ்ருத்திக் ரோஷனுக்கு 48 வயது என்பது குறிப்பிடத்தக்கது;