தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக ரெட்ரோ படம் வெளியானது. ரெட்ரோ படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் தற்போது கருப்பு படம் உருவாகியுள்ளது. நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். 

Continues below advertisement

நிறைய பேச விரும்பல:

இந்த படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் ஆர்ஜே பாலாஜி பேசியதாவது, நான் ஒரு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டா வெளியிலேயே வரமாட்டேன். அவ்வளவா பேசமாட்டேன். செய்ய ஆரம்பிச்ச வேலை முடிவுக்கு வந்துருக்கு. நாங்கள் ஏற்கனவே தீபாவளிக்கு கருப்பு படத்தை கொண்டு வர முயற்சித்தோம். 

இப்போ பெரும்பாலும் படம் முடிந்துவிட்டது. எடிட் பண்ணி நான் படத்தை பாத்துட்டேன். இப்போ எல்லாம் நிறைய பில்டப் கொடுத்தால் யாருக்கும் பிடிக்க மாட்டேங்குது. அதுனால நிறைய பேச நான் விரும்பல. என் தயாரிப்பாளர்களுக்கு படம் ரொம்ப பிடிச்சது. எஸ்ஆர் பிரபு, எஸ் ஆர் பிரகாஷ் இரண்டு பேரும் ப்ளூசட்டை மாறனோட பயங்கரமா படத்தை பாப்பாங்க. அவங்களே படம் பாத்துட்டு படம் நல்லா வந்துருக்குனு சொன்னாங்க.

Continues below advertisement

வில்லன் யார்?

இவ்ளோ நாள் பொறுமையாக கருப்பு படத்தின் அப்டேட்டிற்காக காத்திருக்கீங்க. டீசரை மகிழ்ச்சியா பாத்து எங்களை உற்சாகப்படுத்தினார்கள். டீசரும் எப்படி இருந்ததோ படமும் அப்படித்தான் இருக்கும். நான் அதற்கு சத்தியம் சொல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

பின்னர், அவரிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஆர்ஜே பாலாஜியிடம் சூர்யா கருப்பு படத்தில் ஒருவரிடம் பேசும் புகைப்படத்தை காட்டி இப்போ நான் வில்லன்டா? என்று இடம்பெற்றிருக்கும் வசனத்தை காட்டினார்.  அதற்கு பதில் கூறிய ஆர்ஜே பாலாஜி, படம் வரப்போது. திரையில் பாருங்க. அது நான்தான். இப்போது இதுதான் கூற முடியும் என்று கூறினார்.

ஆர்ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். பின்னர், வீட்ல விஷேசங்க படத்தை இயக்கினார். தற்போது கருப்பு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மலையாள நடிகர் இந்திரன், நடராஜன், சுவாசிகா ஆகியோர் நடித்துள்ளனர். 

வில்லன் யார்?

ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் அவர் வில்லனாக நடித்துள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா? என்று தெரியவில்லை. யோகிபாபுவும் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியம் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

சூர்யாவிற்கு கடைசியாக திரையரங்கில் வெளியான எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ என எந்த படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் சூர்யாவும், அவரது ரசிகர்களும் உள்ளனர்.