நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா இன்று காலை காலமானார்.தமிழ் திரையுலக பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றன. மனோபாலாவின் மகன் தனது தந்தையின் இறப்பு குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசியுள்ளார்.

Continues below advertisement

மனோபாலா இன்று காலை சென்னையில் காலமானார். சில காலங்களாகவே அவரது உடல்  நிலை சரியில்லாமல் இருந்து வந்திருக்கிறது. அண்மையில் அண்ஜியோ பிளாஸ்டி செய்துகொண்டிருக்கிறார் மனோபாலா.அவரது இறப்பு தமிழ் திரையுலகத்தில் இருக்கும் அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோபாலாவின் இறப்புச் செய்தி வெளியானதில் இருந்து திரைப் பிரபலங்கள் இரங்கலைத் தெரிவித்தும் மேலும்  மனோபாலாவின் குடும்பத்திற்கு தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மனோபாலாவின் மகன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்

செய்தியாளர்களிடம் பேசிய மனோபாலாவின் மகன் ஹரிஷ்,தந்தைக்கு இதயப் பிரச்சனை இருந்து வந்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றப் பின் அவர் உடல் நிலை தேறி வந்ததாகவும் தெரிவித்தார்.விரைவில் குனமடைய தனது தந்தை மனோபாலா பிஸியோதெரபி மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக அவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. அவரின் இந்த திடீர்  இறப்பு தனது குடும்பத்திற்கு மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறதென்றும் அவர் தெரிவித்தார். மேலும் இப்படியான ஒரு சோகமான சூழ்நிலையில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை தந்து அவர்களுக்கு தேவையான நேரத்தை தருமாறு தாழ்மையாக கேட்டுகொண்டார். தனது தந்தையின் இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

Continues below advertisement

நடிகர் மனோபாலா அனைவராலும் நகைச்சுவை நடிகராக அறியப்பட்டார் ஆனால் அவர் ஒரு இயக்குநரும் கூட. இயக்குநராக சுமார் 20 படங்களை இயக்கி உள்ளார் மனோபாலா. சிவாஜி கனேசன்,ரஜினிகாந்த்,பிரபு,மோகன்,ராதிகா,பானிபிரியா,கார்த்திக் என முன்னணி நடிகர்கள் அனைவரை வைத்தும் திரைப்படங்களை இயக்கியுள்ளார். நகைச்சுவை நடிகராக ஏறத்தாழ அனைத்து நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் மனோபாலா  ஒரு தயாரிப்பாளரும் கூட. 2014 ஆம் ஆண்டு எச் வினோத் இயக்கத்தில்  வெளியான சதுரங்க வேட்டைத் திரைப்படத்தை தயாரித்தார் மனோபாலா. இந்த படத்திற்காக சிறந்த தயாரிப்பாளருக்கான சைமா விருதை பெற்றார் மனோபாலா. மேலும் ,சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகம்  படத்தை தயாரிக்க இருந்தார் மனோபாலா. நாம் அனைவருக்கும் அதிகம் தெரியாத ஒரு தகவல் என்னவென்றால் சூர்யா அசின் நடிப்பில் வெளிவந்த கஜினி படத்தை மனோபாலா தயாரிக்க திட்டமிட்டிருந்தார்.

சூர்யாவிடம் முருகதாஸை கதை சொல்ல வைத்தார் மனோபாலா ஆனால் சந்தர்ப்ப சூழ் நிலையால்  அவரால் அந்த படத்தைத் தயாரிக்க முடியாமல் போனது.இதனால் அந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடம் கேட்டுக்கொண்டார் ஏ. ஆர். முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது