நடிகர் தனுஷ் நடித்துள்ள கர திரைப்பட ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜூ இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 1990 களின் பின்னணியில் விறுவிறுப்பான த்ரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 55 ஆவது படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து இளையராஜா பையோபிக் , அப்துல் கலாம் பையோபி ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார். ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்திலும் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் தான் மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனுஷூக்கு கிடைத்தும் சம்பளம் காரணமாக அந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார். 

Continues below advertisement

தமிழ் தவிர்துத் தெலுங்கு இந்தியிலும் தனுஷ் தனது மார்கெட்டை விரிவாக்கி வருகிறார். குபேரா திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டு இந்தியில் வெளியான தேரே இஷ்க் மே திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. 

தனுஷூக்கு கதை சொன்ன மணிரத்னம் 

மணிரத்னம் கடசியாக இயக்கிய தக் லைஃப் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது காதல் கதை ஒன்றை இயக்கி தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக தயாரிக்க உள்ளார். இப்படத்தில் முதலில் துருவ் விக்ரம்  ருக்மினி வசந்த்  நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின் இந்த கதையை மணிரத்னம் தனுஷிடம் இந்த கதையை கூறியுள்ளார். தனுஷிற்கும் கதை பிடித்திருந்தது என்றபோதிலும் அவர் கேட்ட சம்பளம் மணிரத்னம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்துள்ளது. இருவரது தரப்பிலும் உடன்படிக்கைக்கு வரமுடியாததால் தனுஷ் இந்த படத்தில்  நடிக்கவில்லையாம் . இதனை அடுத்து விஜய் சேதுபதியிடம் கதை சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் தற்போது ஒரு படத்திற்கு 30 முதல் 60 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள கர படத்திற்கு ரூ  45 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளார். 

Continues below advertisement