Dhanush: 9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த வெற்றி.. '3' படத்தைக் கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி சொன்ன தனுஷ்!

தனுஷ் நடித்த 3 திரைப்படம் ரீரிலீஸ் ஆனதைத் தொடர்ந்து படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்காக நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்

Continues below advertisement

3 படம்

தனுஷ் நடித்து கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 3. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக, அனிருத் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன், பிரபு, பானுப்பிரியா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

Continues below advertisement

இளைஞர்களைக் கவர்ந்த 3

3 திரைப்படம் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தது என்றாலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் படம் வெளியாவதற்கு முன்பாக மிகப்பெரிய ஹிட் ஆகின. அதிலும் குறிப்பாக ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் கண்டம் கடந்து ஹிட் அடித்து யூடியூபில் சாதனைப் படைத்தது.

ரீ ரிலீஸ்

3 படத்தை சமீபத்தில்  ரீரிலிஸ் செய்தது கமலா திரையரங்கம். இப்படி ரீ ரிலிஸாகும் படங்களுக்கு புதிய படங்களுக்கு  நிகரான வரவேற்பு கிடைக்கிறது. தங்களது கடந்த காலத்தில் பார்த்த அல்லது திரையரங்கத்தில் பார்க்க முடியாமல் போன படங்களை பார்த்து கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். 

கடந்த நவம்பர் மாதத்தின் 3வது மாதத்தில் 3 படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதுவும் சென்னையில் முக்கிய தியேட்டர்களில் ஒன்றாக திகழும் வடபழனி கமலா தியேட்டரில் திரையிடப்பட்டது. தீபாவளி படங்கள் சரியாக போகாத காரணத்தால் இப்படம் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தியேட்டர் நிர்வாகம் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இப்படத்துக்கு மீண்டும் கிடைத்துள்ளது. நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 காட்சிகள் ‘3’ படம் திரையிடப்படும் நிலையில் கடந்த 2 வாரங்களாக எல்லா காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது. மேலும் இந்த வாரத்துக்கான காட்சிகளின் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டது. இப்படியாக ரிலீஸ் ஆன சமயத்தில் பெறாத வெற்றியை 3 படம் ரீ-ரிலீஸில் பெற்றுள்ளது. 

இதுவரை வெளியான காட்சிகளின் அடிப்படையில் 3 படத்துக்கு 33 ஆயிரத்து 333 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

 நன்றி தெரிவித்த தனுஷ்

3 படத்துக்கு திரையரங்கத்தில் கிடைத்திருக்கும் அபரிமிதமான வரவேற்புக்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 3 படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு தன்னை உணர்ச்சிவசப்பட வைப்பதாகவும் தனது ரசிகர்களுக்கு கோடி நன்றி எனவும் கூறியுள்ளார் நடிகர் தனுஷ். 

Continues below advertisement
Sponsored Links by Taboola