Just In





Naane Varuven: ஓடிடியை மிரட்ட வரும் ‘நானே வருவேன்’.... ரிலீஸ் தேதியை அறிவிப்பு
துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்த படம் நானே வருவேன்.

நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்த படம் நானே வருவேன். கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்ததால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்திருந்தார்.
நானே வருவேன் படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்திற்கு தணிக்கைக்குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது. மேலும் படமானது கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசானது. இதற்கு அடுத்த நாள் பொன்னியின் செல்வன் படம் வெளியானதால் நானே வருவேன் தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் படம் சூப்பராக இருப்பதாக தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நானே வருவேன் படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 27 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.