Rajinikanth- Dhanush: விவாகரத்துக்கு பின் முதல்முறையாக ரஜினியை சந்தித்த தனுஷ்.. என்ன சொன்னார் தெரியுமா?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா “கலைஞர் 100” என்ற பெயரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

Continues below advertisement

கலைஞர் 100 விழாவில் இரண்டாண்டு இடைவெளிக்குப் பின் ரஜினியும், தனுஷூம் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா “கலைஞர் 100” என்ற பெயரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, கார்த்தி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சாக்‌ஷி அகர்வால், ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன், வடிவேலு, இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றியதோடு மட்டுமல்லாமல் திரைத்துறைக்கென சிறப்பு திட்டங்களை அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், "கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை. நான் ஒரு படத்தின் பூஜையின்போது தான் அவரை சந்தித்தேன். அப்போது கலைஞர் என்னை மன்மத ராசா என அழைத்தார்" என்பதை நினைவு கூர்ந்தார். முதலில் அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் வணக்கம் சொன்ன தனுஷ், ரஜினியை “சூப்பர் ஸ்டார் அவர்களுக்கும்” என குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சி தான் 3 இரண்டாண்டு இடைவெளிக்குப் பின் ரஜினியும், தனுஷூம் கலந்துக் கொண்ட முதல் நிகழ்வாகும். மேலும் ரஜினி நடித்த எந்திரன் படம் பார்க்க கலைஞர் கருணாநிதி வந்த நிகழ்வுகளை பற்றியும் தனுஷ் பேசினார். இதனை ரஜினிகாந்த் ரசித்து கேட்டார். 

ரஜினி - தனுஷ் 

நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்நிகழ்வு அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. காரணம் அப்போது தான் நடிக்கவே வந்து 2 ஆண்டுகள் ஆகிருந்தது. ஆனால் பிற்காலத்தில் தனுஷ் நடிப்புத்துறையில் அடைந்த வளர்ச்சி என்பது மிகப்பெரியது. தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில், 17 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியினர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

விவாகரத்துக்குப் பின் ஐஸ்வர்யா தனது மகன்களுடன் வசித்து வரும் நிலையில், தனுஷ் தனியாக போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இருவரும் தங்கள் சினிமா கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். தனுஷூடன் ரஜினியும் மகள் விவாகரத்துக் பின் பேசிக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆனாலும் ரஜினியின் பிறந்தநாளுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்திருந்தார்.  கடைசியாக 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போயஸ் கார்டனில் தனுஷ் வீடு கட்டுவதற்காக நடந்த பூமி பூஜையில் ரஜினி கலந்து கொண்டார். அதன்பிறகு இந்த நிகழ்வில்தான் இருவரும் இணைந்து பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola