Captain Miller PreRelease Event Dhanush : கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணத்துக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

 

தனுஷ் நடிப்பில் உருவான படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ்குமார் என பலர் நடித்துள்ளனர். 

 

மூன்று பாகங்களாக வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இப்படம், முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளால் நிறைந்திருக்கும் என்பது உறுதி. 1930 முதல் 40 காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்றும், தனிமனிதனின் சுதந்திரத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அருண் மாதேஸ்வரன்  தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன்  எப்படி போராளியாக மாறுகிறார் என்பதே இந்தப் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் என்று அவர் தெரிவித்தார்.
  

 

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜிவி பிரகாஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். விழா தொடங்குவதற்கு முன்பாக ரசிகர்களின் முன்னிலையில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

 

முன்னதாக விஜயகாந்த் மறைவுக்கு தனுஷ் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தனுஷின் அக்காவுக்கு மெடிக்கல் சீட் வாங்கி கொடுத்தவர் விஜயகாந்த் என்று பல முறை பேட்டிகளில் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். அப்படி உதவிய விஜயகாந்த் மறைவுக்கு தனுஷ் செல்லவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருந்தனர். இந்த சூழலில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

 

அப்போது மேடை ஏறிய தனுஷ் ராசாவே உன்னை காணாத நெஞ்சு காத்தாடி காத்தாடி போலாடுது என்ற பாடலை பாடி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.