தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில் தற்போது இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. வரும் பிப்ரவரி மாதம் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சினிமாவில் தனித்துவமான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிகர் , இயக்குநர் , பாடகர் , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் என இவருக்கு பல அடையாளங்கள் உண்டு. தனுஷ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா கடந்த நவம்பர் மாதம் விவாகரத்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து பிரபல நடிகை மிருணாள் தாகூரை தனுஷ் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தன. இப்படியான நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் காட்டுத்தீப் போல் பரவி வருகிறது.
தனுஷ் மிருணாள் தாகூர் திருமணம்
சீதா ராமம் படத்தின் மூலம் இந்தி , தமிழ் , தெலுங்கு ஆகிய மொழியில் கவனமீர்த்தவர் நடிகை மிருணாள் தாகூர். தமிழில் இருவரை அவர் நடிக்கவில்லை. மிருணாள் தாகூர் இந்தியில் நடித்த சன் ஆஃப் சர்தார் திரைப்படத்தின் ப்ரோமோஷனின் போது தனுஷ் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவின. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இருவரும் ஒருவரையொருவர் பாராட்டி பதிவிட்டு வந்தது இந்த வதந்திகளை உறுதிபடுத்தும் விதமாக அமைந்தது. இந்த வதந்திகளை இரு தரப்பினரும் மறுக்கவில்லை. இதேபோல் மற்றொரு தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வதந்தி குறித்து இரு தரப்பினர் கூடிய விரைவில் விள்ளகமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்