குபேரா வெற்றி விழா

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா , ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா திரைப்படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியானது. தமிழ் ரசிகர்களிடம் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தெலுங்கு ரசிகர்களிடம் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இப்படத்தில் தனுஷ் நடிப்பிற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்து  பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனபடம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. குபேரா படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் நடிகர் தனுஷின் செயலால் நடிகர் நாகர்ஜூனா கடுப்பாகியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Continues below advertisement

நாகர்ஜூனாவை அவமானப்படுத்திய தனுஷ் 

குபேரா வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகர் நாகர்ஜூனாவை மேடையில் பேச அழைத்தார்.  அப்போது திடீரென்று எழுந்த தனுஷ் நாகர்ஜூனாவை தடுத்து அவர் மேடையில் ஏறினார். என்ன நடக்கிறது என்று புரியாமல் நாகர்ஜூனா முகம் கடுமையாக மாறியது. தொடர்ந்து மேடையில் பேசிய தனுஷ் " இந்த இடத்தில் நான் முதலில் பேசுவது தான் சரி " என்று கூறியது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நாகர்ஜூனாவின் மீது இருந்த மரியாதையில் அவர் இப்படி செய்தாரா அல்லது படத்தின் நாயகன் என்கிற முன்னுரிமையை கேட்டு எடுத்துக் கொண்டாரா என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. சமீபத்தில் குபேரா ஆடியோ லாஞ்சில் தனுஷ் பக்கம் பக்கமாக் வசனம் பேசியது ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தனுஷ் நல்லாதானே இருந்தார் திடீரென்று ஏன் இப்படி புரியாதமாதிரி நடந்துகொள்கிறார் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள் 

குபேரா திரைப்படம்  3 நாட்களில் உலகளவில் ரூ 85 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்து கடந்த ஆண்டு வெளியான ராயன் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தற்போது குபேரா படமும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது