தனுஷ் நடித்துள்ள ஓம் திரைப்படம் வரும் நவம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் ஓம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷுடன் செல்ஃபீ எடுக்க வந்த ரசிகரை தனுஷின் பவுன்சர்ஸ் தரையில் தள்ளிவிட்ட நிகழ்வு பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர் தள்ளிவிடப்பட்டபோது தனுஷ் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு பலரும் விமர்ச்னம் தெரிவித்து வருகிறார்கள். 

Continues below advertisement

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஓன். தனுஷின் வண்டர்பார் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மம்மூட்டி , சாய் பல்லவி , ஶ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். தமிழ்நாடு , கேரளாவைத் தொடர்ந்து தெலுங்கு வெளியிட்டீற்கான நிகழ்ச்சி நேற்று ஹைதராபாதில் நடைபெற்றது. 

ரசிகர்களை தள்ளிவிட்ட பவுன்சர் 

நிகழ்வில் தனுஷ் உட்கார்ந்திருந்த இடத்திற்கு ரசிகர் ஒருவர் வந்து அவருடன் செல்ஃபீ எடுக்க முயன்றார். அடுத்த சில நொடிகளில் பவுன்சர்கள் அவரை அப்படியே தரையில் தள்ளி அங்கிருந்து விலக்கினர். ரசிகர் தரையில் தள்ளப்பட்டதை கண்டுகொள்ளாமல் தனுஷ் அமர்ந்திருந்ததே ரசிகர்களின் விமர்சனத்திற்கு காரணம். சினிமா தவிர்த்து அரசியலுக்கு அச்சாரம் போடும் இந்த மாதிரியான நேரங்களில் கூடுதல் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். 

Continues below advertisement