தனுஷ் மிருணாள் தாகூர் திருமணம் குறித்தா தகவல் இணையத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு பக்கம் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தாலும் வழக்கம் போல் ஒரு சிலர் தனுஷின் தோற்றத்தை வைத்து அவரை உருவ கேலி செய்து பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகர் தனுஷ் மிருணாள் தாகூர் காதலித்து வருவதாக கடந்த ஆண்டு முதல் அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. அண்மையில் இருவரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் ரகசிய திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி படு வைரலானது. இதுகுறித்து இரு நடிகர்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வராத நிலையில் திருமணம் குறித்தான தகவல்கள் உண்மைதான் என ரசிகர்கள் நம்பி வருகிறார்கள். மேலும் தனுஷ் மிருணாள் தாகூர் சேர்ந்து காணப்படும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
உருவகேலி விமர்சனங்களை எதிர்கொள்ளும் தனுஷ்
தனுஷின் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்த திருமணத்திற்கு பெரியளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மிருணாள் தாகூரை தங்களது அண்ணியாக மானசீகமாக அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஆனால் அதே நேரம் மிருணாள் தாகூர் ரசிகர்கள் சிலர் தனுஷின் தோற்றத்தை விமர்சித்து அவரை உருவகேலி செய்து பதிவிட்டு வருகிறார். 'இந்த மாதிரி மூஞ்சி இருக்கும் ஒருவரால் எப்படி மிருணாள் மாதிரி அழகான பெண்ணை டேட் செய்ய முடிகிறது ' போன்ற பல பதிவுகள் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன.
தனுஷ் ரசிகர்கள் பதில்
இந்த பதிவுகளுக்கு தனுஷ் ரசிகர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார். ஹாலிவுட்டின் மிக அழகான நடிகை அனா டி அர்மாஸ் தனுஷை புகழ்ந்த வீடியோவைப் பகிர்ந்து மிருணாள் தான் தனுஷை கரெக்ட் செய்துள்ளார் என தனுஷிற்கு ஆதரவாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
தனுஷின் திருமணம் குறித்த தகவலுக்கு கூடிய விரைவில் இரு தரப்பினர் சார்பில் இருந்து விளக்கமளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். அப்படி இல்லையென்றால் பிப்ரவரி 14 ஆம் தேதி வரும் வரை திருமண தகவல் உண்மையா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்