இந்திய அளவில் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ரஜினிகாந்த். தமிழ் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். 73 வயதிலும் சோலோ ஹீரோவாக கலக்கி வரும் அவரை பலரும் விமர்சனம் வைத்தாலும் வசூல் மன்னனாகவும் திகழ்கிறார். இவர் இடத்தை பிடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டாலும் ஒரே சூரியன் போல ஒரே சூப்பர் ஸ்டார் இவர்தான் என்றும் பலரும் கூறுவதுண்டு. தனி வழி, தனி ஸ்டைலிலும் ரஜினியை மிஞ்ச எவரும் இல்லை. இந்நிலையில், பிரபல நடிகர் ஒருவர் ரஜினியின் முதல் காதலை பற்றி பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
தமிழ் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பெயர் பெற்றவர் தேவன். விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். பாட்ஷா படத்தில் வில்லனாக நடித்து பெயர் பெற்றவர் தேவன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினிக்கு கை கூடாமல் போன காதல் குறித்து கூறியுள்ளார். ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த போது பல விஷயங்களை நானும் அவரும் பேசியிருக்கோம். அவர் ரொம்ப இயல்பான மனிதர். பெரிய நடிகர் என்ற கர்வம் இருக்காது. பண்பாகவும் நடந்துகொள்வார்.
அப்படி ஒரு நாள் அவரது பர்சனலை பத்தி கேட்கலாமா வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால், நான் அவரிடம் ஓபனாக நீங்க யாரையாவது காதலித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். அவரும் தயங்காமல் காதலித்திருக்கிறேன் தேவன் என கூறினார். நான் உங்க காதல் கதையை சொல்லுங்க சார் என்றேன். அது ரொம்ப அழகான காதல் கதை. அவர் சொல்லி முடிக்கும் போது கண் கலங்கிவிட்டார். ரஜினி சார் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே இப்படி ஒருத்தர் நேசிச்சிருக்காங்க நினைக்கும் போது பெருமையாக இருந்தது.
அவள் அன்று சொன்னாள் நீ பெரிய நடிகர் ஆகணும், உன்னுடைய சினிமா போஸ்டரை பார்க்கணும், உனக்காக வைக்கும் கட் அவுட்டை பார்த்து ரசிக்கனும் என்று சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள். அன்று முதல் அவளை தேடிக் கொண்டிருக்கிறேன். இன்று வரை காண முடியவில்லை என ரஜினி கூறியதாக தேவன் தெரிவித்துள்ளார்.