சமீபத்தில் வெளியாகி மிகவும் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோ, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது தனித்துவமான பேச்சால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் புகழ். அவர் மட்டுமல்லாது, அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு நடிகரான அஷ்வினும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானார்.

குக் வித் கோமாளியில் நிகழ்ச்சியிலேயே இந்த இரண்டு பேரும் சேர்ந்து லூட்டி அடித்தால், மக்கள் அதிகமாக ரசித்தனர். இந்நிலையில், அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கி உருவாகி வரும் படத்தில் புகழ், அஷ்வின் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டைட்டில்  “என்ன சொல்ல போகிறாய்”. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு சில இசை ஆல்பங்களில் அஷ்வின் வந்த அஷ்வின், முன்னணி ஹீரோவாக நடிக்கும் படம் இதுவாகும். காமெடியை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில், அஷ்வின் - புகழ் ஜோடியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

 

இப்படத்தை டிரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, பிரபல இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு படத்தில் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இப்பாடலுக்கு ஆசை என பெயரிடப்பட்டுள்ளது. படக்குழுவின் அறிவிப்பை அடுத்து அஷ்வின் ரசிகர்கள் என்ன சொல்ல போகிறாய் படக்குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், #EnnaSollaPogirai என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்நிலையில் அஷ்வின் தன்னுடைய அடுத்த படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார். கும்கி புகழ் இயக்குநர் பிரபு சாலமன், அஷ்வினை இயக்கவுள்ளார். சோஷியல் ட்ராமாவாக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.