தமிழ் சினிமாவின் செல்ல பிள்ளையாக இருக்கும் நடிகர் ஆர்யாவின் 42வது பிறந்தநாள் இன்று. கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த இந்த கலைஞன் பின்னாளில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என கொண்டாடப்படுவார் என யாரும் நினைக்கவில்லை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆர்யா !!!


 



 


இளசுகளின் ரோமியோ : 


சென்னையிலேயே தனது இளமை பருவத்தை தொடங்கிய இந்த இளைஞன் பின்னாளில் நடிப்பின் மீது இருந்த மோகத்தால் சினிமாவில் 2005ம் ஆண்டு அடியெடுத்து வைத்தார். அறிந்தும் அறியாமலும் திரைப்படம்  மூலம் முகவரி பெற்ற இந்த நடிகன் அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து நடிகர் மாதவனுக்கு அடுத்தபடியாக சாக்லேட் பாய் என பெண்களின் மத்தியில் ரோமியோவாக வலம் வந்தார். இவரின் நடிப்பு திறமையை முழுமையாக வெளி கொண்டு வந்தது மதராசபட்டினம், நான் கடவுள் போன்ற திரைப்படங்கள். பின்னர் நகைச்சுவை கலந்த ரொமான்டிக் திரைப்படங்களான பாஸ் என்கிற பாஸ்கரன், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கஜினிகாந்த் போன்ற திரைப்படங்கள் மூலம் நகைச்சுவையில் தடம் பதித்த அவரின் மார்க்கெட் வேற லெவலுக்கு உயர்ந்தது.


சந்தானம் - ஆர்யா காம்போ ஒரு தரமான சூப்பர் காம்போவாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்கும் சில ஹீரோக்களுக்கு மத்தியில் சில திரைப்படங்களில் கெஸ்ட் அப்பியரன்ஸும் கொடுத்த நடிகர் ஆர்யா வேற மாதிரி என நிரூபித்தார். 


 






 


கவனம் ஈர்த்தவர் : 


நடிகர் ஆர்யாவின் எதார்த்தமான நடிப்பினால் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்தவர். அது மட்டுமின்றி சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் கைப்பற்றினார். ஆர்யாவின் திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் 'நான் கடவுள்'. ஒரு அகோரியாக மிரட்டலான நடிப்பால் பாராட்டுகளை குவித்தார். அடுத்ததாக அவரின் கேரியரில் பெரிய வெற்றியை கொடுத்த மதராசபட்டினம் திரைப்படத்தை தொடர்ந்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னால் எந்த விதமான கதாபாத்திரமானாலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்தார். 


கடுமையான உழைப்பாளி: 


ஆர்யா நடிப்பில் சக்கை போடு போட்ட ஒரு திரைப்படம் சார்பட்டா பரம்பரை. குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியான இப்படத்திற்காக மிக கடுமையாக ஒர்க் அவுட் செய்து மிரட்டலாக நடித்திருந்தார். இது அவரின் கேரியரில் மிக முக்கியமான வெற்றிப்படமாக கருதப்படுகிறது. ஆர்யாவின் பிறந்தநாள் பரிசாக நேற்றே நடிகர் ஆர்யா நடிக்கும் 'காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ஆர்யா ஒரு சிறந்த என்டர்டெய்னர்.


 






 


ஆர்யாவின் அழகான குடும்பம்: 


கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் போது ஆர்யா மற்றும் சாயிஷா இடையே காதல் மலர்ந்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து இந்த கியூட் ஜோடி காப்பான் மற்றும் டெடி படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர். ஒரு அழகான பெண் குழந்தைக்கு பெற்றோரான இந்த தம்பதி பலருக்கும் மிகவும் ஃபேவரட். 
 


ஒன்ஸ் மோர் ஹேப்பி பர்த்டே ஆர்யா !!!