நடிகர் அர்ஜுன் மகள் அஞ்சனா அர்ஜுன் பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கி இருக்கிறார்.
கன்னட சினிமாவில் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமாகியவர் நடிகர் அர்ஜூன். தொடர்ந்து கன்னடத்தில் பல படங்களில் நடித்த அர்ஜூன் தமிழில் ‘ நன்றி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் ‘தாய்மேல் ஆணை’, ‘சொந்தக்காரன்’ ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’ ‘ஜெய்ஹிந்த்’ ‘குருதிப்புனல்’ ‘முதல்வன்’உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும் வளர்ந்தார்.
அதனைத்தொடர்ந்து மார்க்கெட் சரிந்த நிலையில் குணச்சித்திர வேடங்கள், வில்லன், சில படங்களில் கதாநாயகன் என வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த 1988 ஆம் ஆண்டு நடிகை நிவேதிதாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இருமகள்கள் உள்ளனர். நடிகை ஐஸ்வர்யா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது இராண்டாவது மகளான அஞ்சனா புது விஷயம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
அது என்னவென்றால் உலகத்திலேயே முதல் முறையாக நாம் உண்ணும் பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கி இருக்கிறார். அந்த ஹேன்ட் பேக்குகளை விற்பனை செய்ய சர்ஜா என்ற நிறுவனத்தை துவங்கி இருக்கிறார்.
அந்த நிறுவனத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி விஜய ஈஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு துவங்கி வைத்தனர்