ஐஸ்வர்யா உமாபதி திருமணம்


 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அர்ஜூனின் மூத்த மகனளான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் சமீபத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. காதல் திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா - உமாபதி தம்பதிக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.


அர்ஜூன் பங்குபெற்ற பிரபல ஆக்‌ஷன் நிகழ்ச்சியான சர்வைவர் எனும் ஜீ தமிழ் சேனலில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் உமாபதி - மற்றும் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா இருவரும் காதலில் விழுந்ததாகத் தகவல்கள் பரவின. தொடர்ந்து சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்று இவர்களது காதல் உறுதிப்படுத்தப்பட்டது.  தொடர்ந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி கிருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் வைத்து அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் திருமணம் நடைபெற்றது.


இது இருவீட்டார் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணமாகும். இவர்களின் திருமண வரவேற்பு ஜூன் 14ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். திருமணத்துக்கு முன்பு ஹல்தி கொண்டாட்டங்கள்; திருமணத்திற்குப் பின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் என இரு வீட்டு குடும்பத்தினரும் கோலாகலமாக இந்த திருமணத்தை கொண்டாடினார்கள்.






“அவர் ரொம்ப திறமையானவர். மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக ஆகக்கூடிய எல்லா தகுதியும் உமாபதிக்கு இருக்கு. அவர் இயக்குநராகவும் மாறியிருக்கிறார். என்னுடைய மருமகன் என்பதற்காக சொல்லவில்லை” என பாராட்டுக்களை பொழிந்து தள்ளினார்.


குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு






இந்நிலையில், திருமணம் முடிந்த பின் ஐஸ்வர்யா - உமாபதி தம்பதியினர் முதன்முறையாக பொது இடத்துக்கு வருகை தந்துள்ளார்கள். புதுக்கோட்டை திருமயத்தில் உள்ள தங்கள் குல தெய்வக் கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்கள் இந்தப் புதுமண தம்பதிகள். இத்துடன் அங்கு இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பாராட்டுகளைப் பெற்று வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.