கைதி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனமீர்த்தார் நடிகர் அர்ஜூன் தாஸ். அர்ஜூன் தாஸூக்கு அவரது வீட்டில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் நிச்சயிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அர்ஜூன் தாஸ் எந்த விளக்கமும் தரவில்லை. அர்ஜூன் தாஸ் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆர் ஜேவாக பணியாற்றி தனது குரலுக்கு என தனி ரசிகர்களை உருவாக்கிவர் அர்ஜூன் தாஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் வில்லனாக நடித்தார். அவரது நடிப்பைவிட அவரது குரலுக்காகவே அதிகம் பேசப்பட்டார். வில்லனாக மட்டுமில்லாமல் ரொமாண்டிக் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அநீதி , போர் , ரசவாதி , பாம்ப் , கும்கி 2 ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் இந்த படங்கள் வசூல் ரீதியாக அவருக்கு கைகொடுக்கவில்லை. மாறாக மாஸ்டர் , விக்ரம் , குட் பேட் அக்லி போன்ற படங்களில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன
வெளியாகவிருக்கும் படங்கள்
தற்போது அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஶ்ரீகாந்த் இயக்கத்தில் ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதிதி ஷங்கர் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அர்ஜூன் தாஸ் நடிப்பில் ரிலீஸூக்கு காத்திருக்கும் மற்றொரு படம் கான் சிட்டி. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.
திருமண நிச்சயம்
அர்ஜூன் தாஸூக்கு கூடிய விரைவில் திருமணம் நிச்சயிக்கப்பட இருப்பதாக இன்று காலை மூதல் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெரிய ஆடம்பரம் இல்லாமல் அவரது இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெறும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுகுறித்து அர்ஜூன் தாஸ் நேரடியாக அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் அர்ஜூன் தாஸின் நெருங்கிய நட்பு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நிச்சயம் குறித்த தகவலை மறுத்துள்ளனர்
