HBD Suresh Gopi: இந்த ஆண்டு ரொம்ப ஸ்பெஷல்! பல வெற்றிகளுடன் பிறந்தநாளை கொண்டாடும் சுரேஷ் கோபி!

HBD Suresh Gopi : மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Continues below advertisement

கேரளா திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சுரேஷ் கோபி. ஏராளமான மலையாள ரசிகர்களை பெற்று இருந்தாலும் தமிழில் தீனா, சமஸ்தானம், ஐ, தமிழரசன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். தற்போது அரசியலிலும் இறங்கி கெத்து காட்டிய நடிகர் சுரேஷ் கோபியின் பிறந்தநாள் இன்று. 

Continues below advertisement

 

 

சினிமா அறிமுகம் :

‘ஓடையில் நின்று’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பின்னாளில் ராஜாவிண்டே மகன், புது டெல்லி, இருபதாம் நோட்டாண்டு உள்ளிட்ட ஏராளமான படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தார். ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தும் பாராட்டுகளை குவித்துள்ளார். ஷாஜி கைலாஸின் சூப்பர் ஹிட் படமான ‘ஏகலவ்யன்’ மூலம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார். அவரின் தந்தைக்கு சுரேஷ் கோபியை ஒரு போலீஸ் அதிகாரியாக பார்க்க வேண்டும் என ஆசை இருந்தது. அந்த ஆசையை படங்களில் சுரேஷ் ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நிறைவேற்றினார். 

சிறந்த நடிகருக்கான விருது :

பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த சுரேஷ் கோபிக்கு இன்னாலே, ஒரு வடக்கன் வீரகதா, காளியாட்டம் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்று கொடுத்தது. 'காளியாட்டம்' படத்தில் கண்ணன் பெருமாள் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

அரசியல் பயணம் :

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி பெற்று முதல் முறையாக பாஜக கட்சியை கேரளாவில் வெற்றி அடைய செய்தார். சுரேஷ் கோபியின் இந்த வெற்றியை கேரளா மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். கேரளாவின் முதல் பாஜக கட்சியின் எம்.பியான சுரேஷ் கோபிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 


தொடரும் நடிப்பு :

அரசியலில் முழுவீச்சில் இறங்கினாலும் ஏற்கனவே நடிப்பதாக ஒப்பந்தம் செய்த படங்களை நடித்து கொடுக்க முடிவெடுத்துள்ளார். நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பில் ஒரு படத்திலும் கோகுலம் கோபாலன் தயாரிப்பில் மூன்று படங்களிலும் நடிக்க உள்ளார். அதில் ஒரு படம் மிக பெரிய பட்ஜெட்டில் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான்- யுனிவர்ஸ் படமாக உருவாக உள்ளது. அவர் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த சமயத்தில் கூட நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் சுரேஷ் கோபிக்கு இந்த பிறந்தநாள் மிகவும் ஸ்பெஷலான ஒரு பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola