AK 61: “ஜி-க்கு பிறகு ஜியுடன்...” - அஜித்துடன் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்த அம்பானி சங்கர்

13 ஆண்டுகளுக்கு முன் ஜி படத்தில் அஜித்துடன் அம்பானி சங்கர் பணியாற்றி இருக்கிறார். இப்போது ஏகே 61 படத்திற்காக இருவரும் பணியாற்றி வருகின்றனர்.

Continues below advertisement

அஜித் நடிப்பில் உருவான 'வலிமை' படம் கடந்த 24-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அஜித் குமார்,போனி கபூர் மற்றும் ஹெச்.வினோத் குழு ஏகே 61 படத்தில் மீண்டும் சேர்ந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியானது.

Continues below advertisement

அதனை அடுத்து, அஜித்தின் ஒரு புதிய லுக்கின் ஒரு கருப்பு வெள்ளை மாதிரியை போனி கபூர் ஏற்கெனவே ட்விட்டரில் வெளியிட்டார். தொடர்ந்து வெளியான அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவியது. அதனை அடுத்து ஏகே 61 அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஏகே 61 படத்தில் வரும் நடிகர் அம்பானி சங்கர், அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

”ஜி படத்திற்கு பிறகு ஜியுடன்” என்ற கேப்ஷனோடு அவர் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன் ஜி படத்தில் அஜித்துடன் அம்பானி சங்கர் பணியாற்றி இருக்கிறார். இப்போது ஏகே 61 படத்திற்காக இருவரும் பணியாற்றி வருகின்றனர்.

ஏகே 61 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிக்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நாயகி பூஜா ஹெக்டே நடிக்கலாம் எனவும், அனிருத் இசையமைக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola