பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மகளுக்கு இணையத்தில் நடந்த கசப்பான அனுபவத்தைப் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். சைபர் குற்றங்கள் குறித்த விளிப்புணர்வு ஏற்படுத்து நிகழ்ச்சியில் தனது 13 வயது மகளிடம் மர்ம நபர் ஒருவர் நிர்வாண புகைப்படங்களை கேட்டதாக அக்ஷய் குமார் தெரிவித்த செய்தி பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
13 வயது மகளிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட ஆசாமி
மும்பையில் காவல் தலைமையகத்தில் சைபர் பாதுகாப்பு விளிப்புணர்வு குறித்து ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பேசிய அவர் தனது மகளுக்கு நடந்த கசப்பான அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்டார். " கடந்த சில மாதங்கள் முன்பு என் மகளுக்கு நடந்த ஒரு நிகழ்வை பற்றி இங்கு நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சில வீடியோ கேம்களில் நீங்கள் அடையாளம் தெரியாத நபர்களுடன் விளையாடலாம். அப்படி அவள் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர் தரப்பில் இருந்து நீங்கள் ஆணா பெண்ணா என்று கேட்டு ஒரு குறுஞ்செய்தி வந்தது. என் மகள் தான் ஒரு பெண் என்று சொன்னது அவளுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்ப முடியுமா என்று அந்த நபர் கேட்டுள்ளார். உடனே அந்த கேமை ஆஃப் செய்துவிட்டு தனது அம்மாவிடம் அதை சொன்னார். இப்படி தான் சைபர் குற்றங்கள் தொடங்குகின்றன. வெளியே நடக்கும் குற்றங்களை விட இது போன்ற சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 7 முதல் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியில் சைபர் வகுப்புகள் எடுக்க வேண்டும் மகாராஷ்ட்ர முதலமைச்சரிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். " என அக்ஷய் குமார் கூறியுள்ளார்