தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவரது மனைவியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. இவர் 2002ம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் படம் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். திரெளபதி, ருத்ரதாண்டவம் படங்கள் மூலமாக அவர் சமீபத்தில் பேசப்படும் கதாநாயகனாக மாறினர்.
கும்பமேளாவில் ரிச்சர்ட் ரிஷி:
இந்த நிலையில், இவர் உத்தரபிரதேசத்தில் நடக்கும் கும்பமேளாவிற்குச் சென்று சாமி தரசினம் செய்துள்ளார். இந்த வீடியோவை பிரபல இயக்குனர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகா கும்பமேளாவிற்குச் சென்றுள்ள ரிச்சர்ட் ரிஷி கும்பமேளா வீதிகளில் பக்தர்களுடன் பக்தர்களாக உலா வருகிறார்.
பின்னர், பக்தர்களுடன் இணைந்து நடனமாடிய ரிச்சர்ட் ரிஷி, அங்குள்ள கோயில்களுக்கு எல்லாம் சென்று சாமி தரசினம் செய்தார். பின்னர், பக்தர்களுடன் இணைந்து பஜனையிலும் ஈடுபட்டார். சக பக்தர்களுடன் இணைந்து புனித நீராடினார்.
நடிகர் ரிச்சர்ட் ரிஷி 2000ம் ஆண்டு முதல் நடித்து வந்தாலும் அவருக்கு 2006ம் ஆண்டு வெளியான நாளை படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதன்பின்பு, அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிய வெற்றி கிடைக்காமலே இருந்தது.
மோகன் ஜி ஷேர் செய்த வீடியோ:
கடந்த 2020ம் ஆண்டு வெளியான மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரெளபதி படம் அவருக்கு வட தமிழகத்தில் ஓரளவு வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. பின்னர், 2021ம் ஆண்டு மோகன் ஜி இயக்கத்தில் மீண்டும் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்தார். கடைசியாக அவரது நடிப்பில் சில நொடிகளில் என்ற படம் வெளியானது.
ரிச்சர்ட் ரிஷி அடுத்து எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை என்றாலும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோகன் ஜி -யின் ஆஸ்தான ஹீரோவாக உள்ள ரிச்சர்ட் ரிஷியை வைத்து அவர் மீண்டும் படம் இயக்குவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த சூழலிலே, ரிச்சர்ட் ரிஷி கும்பமேளா பயண வீடியோவை இயக்குனர் மோகன் ஜி பகிர்ந்துள்ளார்.
ரிச்சர்ட் ரிஷி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ரிச்சர்ட், அவரது சகோதரி ஷாலினி, ஷாமினி ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக பல படங்களில் நடித்துள்ளனர்.