தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலாமானார். மறைந்த சுப்பிரமணித்தின் உடல் இன்று சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
சுப்பிரமணியம் கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சுமார் 3.15 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார். இது நடிகர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்தின் தந்தை காலமான செய்தி அறிந்த திரைத்துறையினர், அவர்களது உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் பலர் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று மறைந்த சுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நடிகர் அஜித்தின் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா தனது இரங்கல் குறிப்பில், “பிரபல நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை பாலசுப்ரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தந்தையின் மறைவு அஜித் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். தனது தந்தையை இழந்து இருக்கும் இந்த கடினமான நேரத்தில் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கு இதனை தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும், தைரியத்தையும் வழங்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கும்,அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது இரங்கல் குறிப்பில், ”தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் அவர்கள் காலமானதை அறிந்து வருத்தமடைந்தேன். அவர் நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”