விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது. இரண்டு ஆண்டு காத்திருப்புக்குப் பின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது விடாமுயற்சி. அஜித்தின் ஸ்டார் அந்தஸ்த்திற்காக பண்ண படமாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. இதனால் இப்படம் வெகுஜன ரசிகர்களை அந்த அளவிற்கு திருப்தி படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் .

Continues below advertisement

விடாமுயற்சி படத்தின் முழு விமர்சனத்தை படிக்க : Vidamuyarchi Review : அதே பில்டப் அதே ஏமாற்றம்..தொடரும் தமிழ் சினிமாவின் சாபம்...விடாமுயற்சி பட விமர்சனம்

ரசிகர்களுக்கு அஜித் மெசேஜ்

விடாமுயற்சி படத்தின் கதையை நடிகர் அஜித் தேர்வு செய்து மகிழ் திருமேனியை இயக்கவைத்தார். முன்னதாக அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு இந்த படத்திற்கும் ஒரு பொதுவான விஷயம் இரண்டுமே பெண்களை மையப்படுத்தி நகரும் கதைகள். அர்ஜூன் (அஜித்) மற்றும் கயல் (த்ரிஷா) இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணமாகி 12 ஆண்டுகளுக்குப் பின் அர்ஜூனிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புகிறாள் கயல். அவர் வேறு ஒருவரையும் காதலித்து வருகிறார். இப்படத்தில் த்ரிஷாவின் ஒரு வசனம் இப்படி உள்ளது " மனிதர்களாக நாம் ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டிருப்பவர்கள். ஒருத்தரின் மீது நமக்கு இருந்த காதல் காலம் முழுவதும் இருக்கும் என்று சொல்லமுடியாது".

Continues below advertisement

அதேபோல தனது மனைவி இன்னொருவரை காதலிப்பதாக தெரிவிக்கும் போது அர்ஜூன் அவளை திட்டுவதோ , அவமானப்படுத்துவதோ கிடையாது. இதுவே அஜித் இந்த படத்தின் வழியாக தனது ரசிகர்களுக்கு சொல்ல வரும் மெசேஜ். நம்மை காதலித்தவர் நம்மை விட்டு பிரிய நினைத்தால் அவரை அனுமதிப்பதே மரியாதை என்பதை தனது ரசிகர்களுக்கு அஜித் சொல்ல நினைத்திருக்கிறார்.  அஜித் அளவிற்கான ஒரு பெரிய ஸ்டார் இந்த மாதிரியான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது இதனால் தான் பாராட்டிற்குரியது.

இணையத்தில் பரவும் மீம்ஸ்

ஒரு பக்கம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியானாலும் இன்னொரு பக்கம் த்ரிஷாவை மையமாக வைத்து சமூக வலைதளத்தில் மீம்ஸ் வெளியாகி வருகின்றன. த்ரிஷா இன்னொரு நபருடன் உறவில் இருப்பதை கள்ளத் தொடர்பு என  கிண்டலடித்து சமூக வலைதளத்தில் வெளியாகும் மீம்களை பார்க்கையில் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. என்னதான் ஸ்டார்கள் தங்கள் படத்தில் மெசேஜ் சொல்ல நினைத்தாலும் சிலர் அதே பழமையான சிந்தனைகளையே பிடித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்.