அஜித் மலேசியாவில் நடைபெறு 12 மணி நேர கார்பந்தையத்தில் போட்டியிட்டு வருகிறார். மலேசியாவில் அஜித்தை காண நாளுக்கு நாள் கூட்டம் திரண்டு வருகிறது. 12 மணி நேர கார் ரேஸில் கலந்துகொண்ட அஜித் தன்னைப் பார்க்க வந்த 500க்கு மேற்பட்ட ரசிகர்களுடன் ஒவ்வொருத்தராக செல்ஃபீ எடுத்துக்கொண்டது பெரிய பேசுபொருளாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது
சினிமா மட்டுமில்லாமல் மோட்டர் ஸ்போர்ட்ஸில் கலக்கி வருகிறார் அஜித் குமார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் AK64 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கார் பந்தயங்களில் தொடர்ந்து போட்டியிட்டுவரும் அஜித், தற்போது மலேசியாவுக்கு பயணம் செய்துள்ளார். செபாங் நகரில் நடைபெற்று வரும் மிச்லின் 12 மணி நேர ரேஸில், தனது ரேசிங் அணியுடன் அவர் கலந்து கொண்டார். இதில் நடத்தப்பட்ட 24hrs Creventic Series போட்டியில், அஜித் குமார் தலைமையிலான அணி நான்காவது இடத்தை கைப்பற்றியுள்ளது.
500 பேருடன் புகைப்படம் எடுத்த அஜித்
அஜித் கார்பந்தையத்திற்கு மீண்டும் திரும்பியதில் இருந்து மோட்டர் ஸ்போர்ட்ஸ் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. மலேசியாவில் அஜித்தைக் காண் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் படையெடுத்து வருகிறார்கள். நாடு கடந்து தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை அஜித் போட்டிகளிடையே சந்தித்து வருகிறார். 12 மணி நேர காரை ஓட்டிய அஜித் தன்னை சந்திக்க வந்த 500க்கும் மேற்பட்ட ரசிகர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் அஜித்திற்கு பாராடுக்கள் குவிந்து வருகின்றன.