நடிகர் அஜித் குமார், சினிமா எப்படி பீக்குல இருக்காரோ, அந்த அளவுக்கு கார் ரேஸ்லயும் இப்போ கலக்கிட்டு இருக்கார். ஏற்கனவே துபாய்ல நடந்த ரேஸ்ல 3-வது இடம் பிடிச்சு அஜித் குமார் ரேஸிங் டீம் சாதனை படைச்ச நிலைல, இப்போ அடுத்த ரேஸ் பத்தின அப்டேட் வந்துடுச்சு.
ஐரோப்பாவில் நடைபெறும் போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர்
போர்ச்சுக்கல்ல, தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025-ன் முதல் தகுதிச் சுற்று கார் பந்தயம், நேற்றும், நேற்றைய முன்தினமும், அதாவது, ஜனவரி 18 மற்றும் 19ம் தேதிகள்ல நடந்துச்சு. இந்த தகுதிச் சுற்றுப் போட்டியில, சுமார் 50 போர்ஷே கார்கள் பங்கேற்றன. இதுல, ஐரோப்பா முழுவதிலுமிருந்து பிரபல கார் பந்தய அணிகளும், வீரர்களும் கலந்துக்கிட்டாங்க. இதுலதான், தன்னோட போர்ஷே காரோட, தல அஜித் குமார் கலந்துக்கிட்டாரு.

முதல் சுற்றில் தகுதிபெற்ற நடிகர் அஜித் குமார்
இந்த தெற்கு ஐரோப்பிய போர்ஷே ப்ரிண்ட் தொடரோட முதல் தகுதிச் சுற்று போட்டியில, தான் தொடங்கின அஜித் குமார் ரேஸிங் டீம் சார்பா கலந்துக்கிட்ட நடிகர் அஜித் குமார், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருக்காரு. அவர், 4.653 கிலோ மீட்டர் சர்க்யூட்ட கொண்ட லேப்ப, 1.49.13 செக்கண்டுகள்ல கடந்து அசத்தி இருக்காரு. இது பத்தி தங்களோட எக்ஸ் பக்கத்துல பதிவிட்டுருக்கற அஜித் குமார் ரேஸிங், இந்த டைமிங் அவரோட சொந்த சிறந்த டைமிங்ன்னு சொல்லி இருக்காங்க.
இந்த தொடரோட அடுத்த தகுதிச் சுற்று, பிப்ரவரி 7 மற்றும் 8-ம் தேதிகள்ல நடக்குது. எப்படியோ, தன்னோட அடுத்த ரேசையும் வெற்றியோட அஜித் குமார் தொடங்கி இருக்கறதால, அவரோட ரசிகர்கள் ரொம்பவே மகிழ்ச்சில இருக்காங்க.