Fast & furious படத்தில் அஜித் குமார்

நடிகர் அஜித் குமார் தற்போது ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் 24H கார் பந்தையங்களில் கலந்துகொண்டு வருகிறார். ஒரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் கார் ரேஸ் என சர்வதேச அளவில் அஜித் குமார் பிரபலமாகியுள்ளார். சமீபத்தில் கார் ரேஸை மையப்படுத்தி பிராட் பிட் நடித்த F1 திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித் குமார் இந்த மாதிரியான ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற தங்கள் ஆசை வெளிப்படுத்தி வந்தார்கள். இப்படியான நிலையில் அஜித் குமாரிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அஜித் கொடுத்துள்ள பதில் ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. பிராட் பிட் மாதிரியே கார் ரேஸ் மையப்படுத்திய படத்தில் நீங்கள் நடிப்பீர்களா என அஜித்திடன் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இப்படி கூறியுள்ளார் " நிச்சயமாக , ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் மாதிரியான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். என்னுடைய படங்களில் ஸ்டண்ட் காட்சிகளை நானே தான் செய்வேன். அதனால் இந்த மாதிரியான பட வாய்ப்பு வந்தால் தவறவிடமாட்டேன்." என அஜித் குமார் தெரிவித்துள்ளார். 

அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி கமர்சியல் வெற்றிபெற்றது. இந்த படத்தைத் தொடந்து இரண்டாவது முறையாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித் குமார். ரோமியோ பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் ஶ்ரீநிதி ஷெட்டி படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துகுடி துறைமுகத்தை மையப்படுத்திய கேங்ஸ்டர் திரைப்படமாக இந்த படம் உருவாக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன