அஜித் குமார்
விடாமுயற்சி , குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்த அஜித் குமார் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்து வருகிறார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடந்த கார் பந்தையத்தில் அஜித் கலந்துகொண்டார். இந்த போட்டியில் அஜித்தின் குழு மூன்றாவது இடத்தை பிடித்தது தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை அஜித் பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்.
இரண்டாவது முறையாக விபத்தில் சிக்கிய அஜித்
பிப்ரவரி மாத தொக்கத்தில் பயிற்சியின் போது அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்திற்கு உள்ளானது. அஜித்தின் கார் அந்தரத்தில் சுழந்து விழுந்த காட்சி ரசிகர்களை அச்சம் கொள்ள செய்தது. இந்த விபத்தில் இருந்து அஜித் எந்த வித காயமும் இல்லாமல் தப்பினார். நேற்று ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தையத்தின் அஜித் ஓட்டிச் சென்ற கார் இரண்டாவது முறையாக விபத்தில் சிக்கியது.
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அஜித் விபத்தில் சிக்கியுள்ளது அவரது ரசிகர்களை பதற்றப்பட வைத்துள்ளது. ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கனும் என பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இந்த விபத்தில் அஜித்தின் மீது எந்த தவறும் இல்லை என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
அஜித் மேல தப்பு இல்ல
ரேஸின் ஐந்தாவது சுற்று வரை எல்லாம் சரியாக தான் இருந்தது. ஐந்தாவது சுற்றில் அஜித் 14 ஆவது இடத்தை பிடித்து பாராட்டுக்களைப் பெற்றார். ஆனால் ஆறாவது சுற்றில் முன்னாள் சென்ற கார் விபத்து ஏற்பட்டதால் அஜித்தின் கார் அந்த காருடன் மோதியது. ஒருமுறை விபத்து ஏற்பட்டும் அஜித் மீண்டும் டிராக்கில் திரும்பி வந்தார் ஆனால் இரண்டாவது முறை மீண்டும் விபத்து ஏற்பட்டது. இதில் அஜித்தின் தவறு ஏதும் இல்லை. அஜித் விடாமுயற்சி அசைக்க முடியாதது. எந்த வித காயமும் இல்லாமல் அவர் மீண்டும் டிராக்கிற்கு திரும்பினார்.