சஞ்சய் ராமசாமியாக அஜித் குமார்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து 2005 ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் கஜினி. இந்த படத்தில் சூர்யாவுக்கு முன்பாக சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தில் அஜித் குமார் நடிக்க இருந்தார். அப்போது படத்திற்கு 'மிரட்டல்' என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இப்படத்தில் அஜித் நடிக்காததற்கான காரணத்தை இயக்குநர் முருகதாஸ் பகிர்ந்துகொண்டார்.

சிக்ஸ் பேக் வைக்க ரெடியாக அஜித் 

"தீனா படம் முடிந்ததும் தீனா 2 படத்திற்கான பேச்சுவார்த்தை  நடந்தது. அதன்பின் அஜித் சார் கும்பகோணத்தில் ஜீ படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது அவரை சந்தித்து கஜினி படத்தின் கதையை சொன்னேன். கதை கேட்ட அஜித் இந்த படத்தில் நடிக்கும் ஹீயோயினுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றார். பின் இந்த படத்திற்காக அவர் சிக்ஸ் பேக் வைப்பதாக சொன்னார். அன்றைய சூழலில் யாரும் சிக்ஸ் பேக் வைத்ததில்லை. ஆனால் ஒரே நேரத்தில் அட்டகாசம் , நான் கடவுள் ஆகிய படங்களில் அஜித் நடிக்க இருந்தார். நான் கடவுள் படத்தில் அவர் நீண்ட தலைமுடி வளர்க்க வேண்டும் இதனால் இந்த படத்தை எங்களால் எடுக்க முடியவில்லை. அஜித் சார் சொன்ன பிறகு தான் சூர்யாவுக்கு சிக்ஸ் பேக் வைக்க முடிவு செய்தேன். இந்தியில் ஆமிர் கான் நடித்தபோதும் சிக்ஸ் பேக் வைக்க சொன்னேன். அஜித் சார் சஞ்சய் ராமசாமியாக நடித்த இரண்டு நாள் காட்சிகள் இன்னும் என்னிடம் இருக்கின்றன. அதை எல்லாம் இப்போது பார்த்தாலும் பிரம்மிப்பாக இருக்கிறது" என ஏ. ஆர் முருகதாஸ் கூறியுள்ளார்.