மலேசியாவில் நடந்து வரும் மிஷ்லின்12 கார்பந்தையத்தில் பங்கேற்றுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக மலேசியாவில் செபாங் நகரத்தில் திரண்டு வருகிறார்கள். சிறுத்தை சிவா , இயக்குநர் விஜய் ஆகியோர் போட்டி இடையில் அஜித்துடம் நேரம் செலவிட்டு வருகிறார்கள். அஜித்தைப் பற்றி ஆவணப்பட பணிகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் நடிகர் சிலம்பரசன் அஜித்தை மலேசியாவில் சென்று சந்தித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத் தக்கது.
நான்காம் இடத்தைப் பிடித்த அஜித் அணி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் AK64 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் கார் பந்தையங்களில் போட்டியிட்டு வந்த அஜித் தற்போது மலேசியா சென்றுள்ளார். செபாங் நகரச்த்தில் நடைபெற்று வரும் மிச்லின் 12 மணி நேர போட்டியில் அஜித் தனது ரேஸிங் குழுவுடன் கலந்துகொண்டார். இதில் 24hrs Creventic Series போட்டியில் அஜித் குமாரின் அணி 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
போட்டிகளின் இடையே திரைத்துறையில் அஜித்திற்கு நெருக்கமானவர்கள் அவரை சந்தித்து நேரம் செலவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சிறுத்தை சிவா , ஏ.எல் விஜய் ஆகிய இயக்குநர்கள் மலேசியாவில் அஜித்துடன் இருந்து வருகிறார்கள். தொடர்ந்து நேற்று நடிகர் சிலம்பரசன் அஜித்தை மலேசியா சென்று சந்தித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இதற்காக அவர் கடுமையாக உடல் எடையை குறைத்துள்ளார். அஜித்தின் தீவிர ரசிகராக சிம்பு இருந்தாலும் இருவரும் பொதுவெளியில் குறைவாகவே சந்தித்துள்ளார்கள். அந்த வகையில் இந்த சந்திப்பு சிம்பு மற்றும் அஜித் ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது .