தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கன்னியாகுமரியில் சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் இயக்குனர் பாலாவுக்கு நடிகர் சூர்யாவுக்கும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வணங்கான் படப்பிடிப்பு இடையில் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 


 



 


இணைந்த 'அருவி' பட இயக்குனர் : 


திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த தகவல் சோசியல் மீடியா மூலம் வேகமாக பரவ இரு தரப்பினரும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களுக்குள் எந்த ஒரு கருத்து வேறுபாடும்  இல்லை மீண்டும் இணைவோம் என்றனர். மேலும் இயக்குனர் பாலா திரைக்கதையில் மாற்றம் செய்யப்போவதாகவும், உதவி இயக்குனராக 'அருவி' பட புகழ் அருண் புருஷோத்தமன் இணைய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. 


 







சூர்யா கதாபாத்திரத்தில் யார் என்ற குழப்பம்:


அந்த வகையில் நேற்றைய அறிக்கையின் படி திரைக்கதை மாற்றத்தால் நடிகர் சூர்யாவுக்கு அந்த கதை உகந்ததாக இருக்குமா என்ற பயத்தால் சூர்யா இந்த வணங்கான் படத்தில் இருந்து விலகியதாக அறிக்கை வெளியானது. இருப்பினும் படத்தின் வேலைகள் நடைபெற்றுவருவதால் படத்தின் நடிக்க இருக்கும் நடிகர் குறித்த பல செய்திகள் பரவி வருகின்றன.


முதலில் சூர்யா நடிக்க இருந்த கதாபத்திரத்தில் ஆர்யா நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அது அதர்வா என கோலிவுட் சினிமா வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் பாலாவின் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருக்கிறாராம் இயக்குனர் பாலா. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் இது வரையில் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


 






 


சூர்யா விலக காரணம் :
 
வணங்கான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சம்பந்தமாகவே சூர்யா - பாலா மோதல் ஏற்பட்டதாகவும் அதனால் வெறுப்பான இயக்குனர் இந்த பிரிவை பற்றி சொல்ல நடிகரும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஒரு மாத காலமாக கன்னியாகுமரியில் நடைபெற்ற படப்பிடிப்பில் வெறும் இரண்டே காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன. இந்த ரீதியில் தொடர்ந்தால் பட்ஜெட் எகிறிவிடும் என்ற அச்சத்தால் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இத்தனை ஆண்டு உறவை சண்டையுடன் முறித்து கொள்வதை காட்டிலும் கைகுலுக்கி சந்தோஷமாக விடைபெற்றுக் கொள்ளவே இந்த முடிவு என்றும் கோலிவுட் சினிமா வட்டாரம் தெரிவிக்கின்றன.