தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தவர் தான் நடிகர் அப்பாஸ். கிட்டத்தட்ட எல்லா மொழியிலும் சேர்த்து 52 படங்களில் நடித்துள்ளார். இவருடைய முதல் படமே காதலை மையப்படுத்தி வெளியான காதல் தேசம் திரைப்படம் தான். அப்பாஸ் நடித்த பெரும்பாலான படங்கள் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது தான். எனவே தான் திரையுலகில் இவருக்கு சாக்லேட் ஹீரோ என்று பெயர் கிடைத்தது.

காதல் தேசம், படத்தின் வெற்றிக்கு பின்னர், விஐபி, பூச்சூடவா, படையப்பா, ஹே ராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, ஆனந்தம் என்று ஹிட் படங்களில் நடித்தார். ஆனால், அதன் பிறகு வந்த படங்கள் பெரியவில் ஹிட் கொடுக்கவில்லை. கடைசியாக 2009 ஆம் ஆண்டு திரைக்கு வந்த குரு என் ஆளு என்ற படத்தி நடித்தார். அதன் பிறகு எந்த தமிழ் படத்திலும் இவரை பார்க்க முடியவில்லை. 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பச்சக்கல்லம் என்ற மலையாள படம் தான் இவரின் கடைசி படமாக இருக்கிறது.

இவர் நடித்த படங்கள் இதுவும் இவருக்கு கை கொடுக்காத நிலையில்,  அப்பாஸ் என்ற ஒரு நடிகரையே தமிழ் சினிமா மறந்தது. இதையடுத்து நியூசிலாந்து சென்று பெட்ரோல் பங்கில் வேலை பார்த்ததாக கடந்த ஆண்டு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இதே போன்று பல வேலைகள் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் தான் தனது மகன் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

அப்படி என்ன பேசியிருக்கிறார் என்று பார்த்தால், தன்னுடைய மகன் தனக்கு தான் பிறந்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். அப்பாஸின் மகன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அப்பாஸ்: என்னுடைய மகன் ரொம்பவே சைலண்ட். நான் சின்ன வயசுலேயே ஜாலியான டைப், கலாட்டா எல்லாம் பண்ணிருக்கேன். என்னுடைய மகன் அப்படி இல்லை. ரொம்பவே சாஃப்ட். இந்த வயசிலேயே தெளிவாக இருக்கிறார். அதனால், அவர் என்னுடைய மகன் தானா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. டிஎன்ஏ பரிசோதனையில் என்னுடைய மகன் என்று உறுதியானது என்று கூறியுள்ளார். இவர் இதை ஜாலியாக பேசி இருந்தாலும், இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் சென்சேஷனலாகா பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது நடிகர் அப்பாஸ், பிரபல ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ள எக்ஸாம்ஸ் என்கிற வெப் தொடரில் நடிக்க உள்ளார். புஷ்கர் காயத்திரி இந்த தொடரை தயாரித்து வருகின்றனர். இதில் முக்கிய கதாபாத்தியதில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.