விடாமுயற்சி
அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜூன். த்ரிஷா , ரெஜினி , ஆரவ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
அஜித்துடன் விபத்தில் சிக்கிய அனுபவம்
விடாமுயற்சி படத்தின் அத்தனை ஸ்டண்ட் காட்சிகளிலும் நடிகர் அஜித் குமார் நடித்துள்ளார். படத்தில் ஆரவ் மற்றும் அஜித் இடம்பெற்ற காட்சியின் போது அஜித் குமார் ஓட்டிச் சென்ற கார் விபத்திற்குள்ளானது . இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரவலாக ஷேட் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து நடிகர் ஆரவ் தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்
" அந்த விபத்து ஏற்பட்டதும் அஜித் என்னிடம் நீ போய் மருத்துவமனையின் எக்ஸ் ரே எடுக்கனும் என்று சொன்னார். இன்னும் பத்து நாள் தான் படப்பிடிப்பு இருந்ததால் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு எக்ஸ் ரே எடுத்துக் கொள்ளலாம் என்று நான் நினைத்தேன். அது அஜித் ரசிகர்களுக்கு தெரிந்துவிட்டது. அதனால் படப்பிடிப்பு முடிந்ததும் அவருடன் காரில் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டரிடம் எல்லா விபரங்களையும் சொல்லி அவர் என்னை சொதித்து பார்க்கும் வரை ஒரு மணி நேரம் வெளியே நின்றிருந்தார். மருத்துவர்கள் பார்த்து ஏதும் இல்லை என்று சொன்னபிறகு அஜித் சார் என்னிடம் மன்னிப்பு கேட்டார் . இந்த மாதிரி எப்போது நடக்காது. என்னால் உனக்கு இப்படி ஆனது எனக்கு ரொம்ப வருத்தம் என்று அஜித் சொன்னார். இது எல்லாம் தெரிந்துதான் நான் சினிமாவிற்கு வந்திருக்கிறேன் சார். அதுவும் உங்களுடன் இருக்கும்போது இந்த மாதிரியான ஒரு அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று நான் அவரிடம் சொன்னேன். அந்த இரவு ஒரு செமையான இரவாக எனக்கு இருந்தது. " என ஆரவ் தெரிவித்துள்ளார்