கூலி குறித்து ஆமிர் கான் 

லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது கூலி திரைப்படம். செளபின் சாஹிர் , நாகர்ஜூனா , உபேந்திரா என இப்படத்தில் மூன்று தென் இந்திய மொழியின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இவர்கள் தவிர்த்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆமிர் கான் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தைப் போல ஆமிர் கானின் தாஹா கதாபாத்திரம் சிறப்பாம வரும் என பலரும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தார்கள். ஆமீர் கான் படத்தில் நடித்திருப்பது ஏற்கனவே தெரிந்துவிட்டதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் ஆமிர் கான் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் ரஜினியுடன் சேர்ந்து பீடி பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இவ்வளவு பெரிய ஸ்டாரை கூட்டி வந்து ரஜினிக்கு பீடி பற்ற வைக்க வைத்துவிட்டார் லோகேஷ் என பலர் கேலி செய்து வந்தனர்.

அதே போல் ஒரு கதையை தேர்வு செய்ய பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும் ஆமிர் கான் எந்த வித முக்கியத்துவமும் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஏன் சம்மதித்தார் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர் . இப்படியான நிலையில் கூலி படத்தில் நடித்தது குறித்து ஆமிர் கான் பதிலளித்துள்ளார்

ரஜினிக்கு சிகரெட் பற்ற வைத்தால் என்ன?

இதுகுறித்து பேசியபோது " ஆமாம் கூலி படத்தில் ரஜினிக்கு சிகரெட் பற்ற வைப்பது தான் என் வேலை. அதை செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. நான் ஒரு படுதீவிரமான ரஜினி ரசிகன். அவருடன் இணைந்து நடிப்பது என்பது எனக்கு பெரிய பெருமை மற்றும் காலத்திற்கும் நான் நினைவில் வைத்திருக்கும் ஒரு தருணம் . " என்று ஆமிர் கான் தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்தார்