ஆச்சார்யா பட தோல்வி எதிரொலி காரணமாக, பிரபல நடிகர் சிரஞ்சீவியை விநியோகஸ்தர்கள் மிரட்டி நஷ்டஈடு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  


தெலுங்கில் சிரஞ்சீவி ராம்சரண் முதன்முறையாக இணைந்து நடித்த படம் ஆச்சார்யா.  தெலுங்கு பிரபல இயக்குநர் கொரட்டல சிவா இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் பிங்க் வில்லா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, ஆச்சார்யா படத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு, 25 விநியோகஸ்தர்கள் நேற்று இரவு இயக்குநர் கொரட்டலா சிவாவின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்களாம். 


 






மேலும் இந்தப் பிரச்சினையை சரிசெய்து, நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிரஞ்சீவி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியதோடு, அவரை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது வந்துள்ள தகவலின் படி, 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அண்மையில் ராஜ்கோபால் பாலாஜி என்ற விநியோகஸ்தர் நஷ்டத்தை ஈடுகட்ட பணம் வழங்குமாறு சிரஞ்சீவிக்கு கடிதம் ஒன்றை  கடிதம் எழுதியிருந்தார். இவர் இந்தப்படத்தில் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 140 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் உலக அளவில் 76 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 


 






சிரஞ்சீவியின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் காட் ஃபாதர். மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.