நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற பிரபல ஓடிடி தளங்கள் போல வளர்ந்து வரும் ஓடிடி தளங்களும் இந்தியாவில் உள்ளது.  அதில் ஏபிசி டாக்கீஸ் ஓடிடி தளம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏபிசி டாக்கீஸ், அதன் முதன்மை முயற்சியின் நான்காவது பதிப்பாக தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விளம்பர தூதராக நடிகை சாக்ஷி அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.


தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச்:

தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச்சானது புதிய திறமைகளைக் கண்டுபிடிப்பதற்கும், ஆர்வமுள்ள திரைப்பட படைப்பாளிகளுக்கு அவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு முக்கிய மேடையை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஏபிசி டாக்கீஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ் திரைப்பட படைப்பாளிகளின் படைப்பாற்றல் மற்றும் பன்முகத்தன்மை அங்கீகாரம் பெறுவதுடன், அவர்களுக்கு வருவாய் போதியளவு கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஏபிசி டாக்கீஸ் தளத்தில் திரைப்பட படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை முதல் பார்வையில் இருந்து நேரடியாகப் பதிவேற்றவும் பணமாக்கவும் அனுமதிக்கப்படுகிறது.


அனைவருக்கும் அனுமதி, அனைவருக்கும் பரிசு


தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச் போட்டியில் கதைசொல்லிகளும் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள். இதில் பங்கேற்கும் படைப்புகள் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை அடையவும், அவர்களின் படைப்புகளை உடனடியாகப் பணமாக்கவும் அனுமதிக்கும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதில் அதிக பார்வையிடப்பட்ட படம் மற்றும் அதிக வசூல் செய்த படத்திற்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது. 


 இந்த போட்டியில் பங்கேற்க படைப்பாளிகள் தங்கள் திரைப்பட படைப்புகளை அக்டோபர் 3 முதல் நவம்பர் 10ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.  போட்டி நவம்பர் 15 முதல் டிசம்பர் 31,2024 வரை நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர் யார் என்று பொங்கல் தினமான அடுத்தாண்டு ஜனவரி 15ல் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு gp@abctalkies.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம். 


ஏபிசி டாக்கீஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஷாலிபத்ரா ஷா இந்த முன்முயற்சிக்கான தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டார்: " தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச் என்பது ஒரு போட்டியை விட அதிக மானது; இது அச்சுகளை உடைப்பதற்கான ஒரு இயக்கம். தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான படைப்பாளிகளுக்கு தகுதியான தளத்தை வழங்குவதன் மூலம், எல்லைகள் இல்லாமல் படைப்பாற்றலை வளர்த்து, அவர்கள் கவனத்தை ஈர்க்க உதவுகிறோம். இந்த பதிப்பு உலகிற்கு கொண்டு வரும் தனித்துவமான கதைகளைப் பார்க்க நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக இருக்கிறோம் ".