ரவி மோகன் - ஆர்த்தியின் குடும்ப பிரச்சினை மீண்டும் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறி உள்ள நிலையில், பாடகி சுசித்ரா இது குறித்து பேசி உள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
ஆர்த்தி, பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் என்பதால் ஆர்த்திக்கு சினிமா துறையைச் சேர்ந்த பலரும் நண்பர்களாக உள்ளனர். இதன் காரணமாகவே அவர் பிரபலங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கு ரவி மோகனுடன் மட்டுமின்றி, தனியாகவும் சென்று கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். மிகவும் சுதந்திரமான பெண்ணாகவும் ஆர்த்தி அறியப்படுகிறார்.
ஆர்த்தி நடிகையாக இல்லாத போதும் ஃபேஷன் துறையில் பிரபலமான பெண் என்பதால், அடிக்கடி விதவிதமான உடை அணிந்து அதனை சமூக வலைதளத்திலும் வெளியிட்டு நெட்டிசன்கள் மத்தியிலும் பிரபலமாகி உள்ளார். இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே... ஆர்த்தி குறித்து மிகவும் மோசமாக விமர்சிக்கும் விதமாக சுசித்ரா தொடர்ந்து பேசி வரும் நிலையில், தற்போது ஆர்த்தி மற்றும் தனுஷை இணைத்து வைத்து பேசியுள்ளார்.
இதுகுறித்து சுசித்ரா பேசியுள்ளதாவது, "ஜெயம் ரவியும், கெனிஷாவும் ரிலேஷன்ஷிப்பில் தான் உள்ளனர். எந்த ஒரு ஆதரவும் இல்லாமல், நிற்கதியாக ரவி நின்றபோது... அவருக்கு அடைக்கலம் கொடுத்தது முதல் ஆதரவாக இருந்தது வரை அவருக்கு உறுதுணையாக இருந்தவர் கெனிஷா தான். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த ரவியை அதில் இருந்து தன்னுடைய ஹீலிங் தெரபி மூலம் மீட்டு கொண்டு வந்தார்.
ஜெயம் ரவி, தன்னுடைய குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பதற்காக துடித்து கொண்டுதான் இருக்கிறார். பிள்ளைகளை பள்ளிக்கு பார்க்க போனால்... அங்கும் பவுன்சர்களை அனுப்பி ஆர்த்தியின் குடும்பத்தினர் அராஜகம் செய்து வருகின்றனர். ஜெயம் ரவிக்கு இருக்கும் அளவிற்கு ஆர்த்திக்கு, அவருடைய பிள்ளைகள் மீது பாசம் இல்லை.
ஆர்த்தி திருமணத்திற்கு பின் முன் தன்னை நல்லவராக காட்டிக் கொண்டு ரவியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரே அவருடைய சுயரூபம் ரவிக்கு தெரிய வந்தது. தற்போது கெனிஷாவையும் - ஜெயம் ரவியையும் மோசமானவர்கள் என்று சித்தரித்துவிட்டு, சில மாதங்களுக்கு பிறகு ஆர்த்தி நடிகர் தனுசை திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. அதன் பிறகு குஷ்புவே முன்வந்து அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தது நான் தான் என பெருமையாக பேசுவார்.
பல வருடங்களாக தனுஷுக்கும் - ஆர்த்திக்கும், ரிலேஷன்ஷிப் இருந்து வருகிறது இந்த ரிலேஷன்ஷி குறித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ரவிக்கே தெரியும். ஆர்த்தி ரவி வெறுப்பேற்றுவதற்காகவே தனுஷுடன் சேர்ந்து நாக்கை வெளியே நீட்டியபடி ஒரு போட்டோவை எடுத்துக் கொண்டார். இதுபோல் நாக்கை வெளியே நீட்டியபடி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களுக்கு சில "கோட் வேர்ட்" சொல்லப்படுகிறது. அதாவது நாங்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் விதமாகவே.. இது போன்ற சைகைகள் காட்டப்படுகின்றன. இதனால் பிரச்சனை வரும் என தெரிந்து ஆர்த்தி மற்றும் அவருடைய அம்மா இருவரும் இது போன்ற புகைப்படங்களை டெலிட் செய்து விட்டனர். இவை எல்லாத்துக்கும் ஜெயம் ரவியிடம் உரிய ஆதாரம் இருக்கிறது.
இந்த பிரச்சனைகள் வெளியே வந்தால் தன்னுடைய சுயரூபம் தெரிய வந்துவிடும் என்பதற்காகவே ஆர்த்தி நீதிமன்றத்திற்கு வர பயப்படுகிறார் என சுசித்ரா பேசியுள்ளார். சுசித்ராவின் இந்த பேச்சு தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனுஷின் ரசிகர்கள் பலர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விஷயத்தில் ஏன் தேவையில்லாமல் தனுஷை இழுக்குறீங்க என கமெண்ட் போட்டு வருவதோடு, ஒரு புகைப்படத்தை சுட்டிக்காட்டி இப்படி மோசமாக பேசுவதா என சுசித்ராவை திட்டி தீர்த்து வருகின்றனர்.