நடிகர் ரவி மோகன் நேற்று ஆர்.எம் ஸ்டியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நேற்று தொடங்கிய நிலையில் ரவி மோகனை மறைமுகமாக தாக்கும் வகையில் இன்ஸ்டா பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த ஜெயம் ரவி, சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து செய்வதாக அறிவித்து, பெயரையும் “ரவி மோகன்” என்று மாற்றினார். அதன்பிறகு பாடகி கெனிஷாவுடன் பல்வேறு இடங்களில் இணைந்து காணப்பட்டு, தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
சொந்த தயாரிப்பு நிறுவனம்:
சமீபத்தில் இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இன்று ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற “ரவி மோகன் ஸ்டூடியோஸ்” அறிமுக விழாவில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில், பாடகி கெனிஷா தான் தனது நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாகவும் ரவி மோகன் அறிவித்துள்ளார்.
ஆர்த்தி ரவி பதிவு:
இதையடுத்து, நிறுவன வளர்ச்சிக்காக நேற்று முன் தினம் கெனிஷாவுடன் திருப்பதிக்கு சென்று வழிபட்டார் ரவி மோகன். அந்த புகைப்படங்கள் பரவி வரும் வேளையில், முன்னாள் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்திருந்தார்
அதில் “நீங்கள் பிறரை முட்டாளாக்கலாம். உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால், கடவுளை ஒருபோதும் ஏமாற்ற முடியாது.”
மற்றொரு பதிவில், “எப்போதும் உங்கள் பிள்ளைகள் பக்கம் இருங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பும் நேரமும் தேவை. எது நடந்தாலும், அவர்களின் மன அமைதியை பாதுகாப்பதே பெற்றோரின் கடமை” என்று தெரிவித்துள்ளார்.இந்த பதிவு ரசிகர்களிடையே மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.