மேலும் அறிய

ஆரி அர்ஜுனன் நடிக்கும்  “4த் ஃப்ளோர்”   டிரெய்லரை  விஜய் சேதுபதி, ஆர்யா, பா ரஞ்சித், விஜய் ஆண்டனி வெளியிட்டனர்! 

செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் இப்படத்தை தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும்  27ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா  தயாரிப்பில், இயக்குநர் L R  சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான  திரில்லராக உருவாகியுள்ள  “4த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான விஜய் சேதுபதி, ஆர்யா, பா ரஞ்சித், விஜய் ஆண்டனி ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே இன்று வெளியிட்டனர். 

இன்று வெளியான டிரெய்லர் ஆரம்ப கட்டத்தில் ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை காட்டுகிறது.  ஹாரர் படம் என்று நினைக்கையில் அப்படியே தடம் மாறி, கொலைகளை அதன் விசாரணைகளைக் காட்டி ஒரு அசத்தலான திரில்லர் அனுபவமாக நிறைவு பெறுகிறது. கனவு, கொலைகள், விசாரணை என வெவ்வேறு பாதைகளில் கதை பயணிக்கிறது. ஒரு புதுமையான திரில்லர் அனுபவத்தை உறுதி செய்யும் இந்த டிரெய்லர், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 நடிகர் ஆரி அர்ஜுனன் நடித்த ஃபோர்த் ஃப்ளோர் திரைப்படம் அவருடைய நெடுஞ்சாலை, மாயா, ரெட்டைச் சுழி போன்ற குறிப்பிடத்தகுந்த வெற்றிப் படங்களின் வரிசையில் அமையும். மார்கன், மார்க் படங்களில் நடித்த தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா,தலைவாசல் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த இந்த திரைப்படம் கனவுகளுக்கும் நிஜவாழ்க்கைக்கும் இடையே இணைக்கும் பாலமாக எழுதப்பட்டுள்ளது. தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தை பரபரப்பாக இயக்கியிருந்த எல். ஆர். சுந்தரபாண்டி அதே வேகத்தில் ஃபோர்த் ஃப்ளோர் படத்தை இயக்கியுள்ளார் என அதன் டிரைலரில் தெரிகிறது. தணிக்கை செய்யப்பட்ட  இந்தபடம் யூ ஏ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகம் சுளிக்க வைக்காத,காட்சிகளுடன் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படமாக இந்தப்படம் இருக்கும், பிரச்சனைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கும் நாம் தான் கவனமாக இருக்கவேண்டும் என்ற கருத்தை அதன் திரைக்கதை போக்கிலேயே சொல்லியிருப்பதாக இயக்குநர் எல். ஆர். சுந்தரபாண்டி தெரிவித்தார்.

இப்படத்திற்கு “போடா போடி” படப்புகழ் இசையமைப்பாளர் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், “போடா போடி” வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. 

தொழில் நுட்ப குழு விபரம் 
இயக்குநர்: L R சுந்தரபாண்டி 
தயாரிப்பாளர்: A.ராஜா 
நிர்வாக தயாரிப்பாளர்: சூரிய பிரகாஷ் P
ஒளிப்பதிவு : J லக்ஷ்மன் 
இசையமைப்பாளர்: தரண் குமார்
பாடலாசிரியர் : கு கார்த்திக்
எடிட்டர்: ராம் சுதர்ஷன்
கலை: சுரேஷ் கல்லேரி 
நடனம் : அபு சால்ஸ்
ஸ்டண்ட்: டேஞ்சர் மணி 
மக்கள் தொடர்பு : A ராஜா

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
தவெக மகளிர் தின கொண்டாட்டத்தில் கொள்ளி வைத்த சங்கீதா..கொந்தளிக்கும் மகளிர் படை
தவெக மகளிர் தின கொண்டாட்டத்தில் கொள்ளி வைத்த சங்கீதா..கொந்தளிக்கும் மகளிர் படை
பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள்...விஜய்க்கு துணை முதல்வர் மனைவி கிருத்திகா உதயநிதி அறிவுரை ?
பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள்...விஜய்க்கு துணை முதல்வர் மனைவி கிருத்திகா உதயநிதி அறிவுரை ?
வசிக்க வீடில்லாமல் இருக்கிறேன்...விஜயின் மனைவி சங்கீதா புதிய குற்றச்சாட்டு
வசிக்க வீடில்லாமல் இருக்கிறேன்...விஜயின் மனைவி சங்கீதா புதிய குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
Embed widget