பாலிவுட் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் அமீர் கான். நடிப்பை தாண்டி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தன்னை நிரூபித்தவர். நிதேஷ் திவாரி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான 'தங்கல்' படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த காலகட்டத்தில் அதிகம் வசூல் செய்த பாலிவுட் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. அது மட்டுமின்றி இந்தியாவில் அதிகம் வசூல் செய்த 20 வெளிநாட்டு படங்களின் பட்டியலில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சியான நிகழ்வு குறித்து சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருந்தார் அமீர் கான்.
மக்களின் வரவேற்பு :
அமீர் கான் தன்னுடைய பெண் பிள்ளைகளை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்க வேண்டும் என்ற மிகப்பெரிய கனவை நனவாக்க அவர் எதிர்கொண்ட போராட்டங்களை மையமாக வைத்து உருவான திரைப்படம் 'தங்கல்'. அமீர் கான் தன்னுடைய அனுபவம் குறித்து பேசுகையில் பஞ்சாப்பில் ஒரு சிறிய கிராமத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அதிகாலையில் செல்லும் போது கூட அந்த கிராமத்து மக்கள் அவர்களின் வாசலிலேயே நின்று கொண்டு என்னை பார்த்து இரு கைகளையும் கூப்பி 'நமஸ்தே' என வணங்குவார்கள். அதே போல படப்பிடிப்பு முடிந்து இரவு திரும்புகையிலும் 'குட் நைட்' சொல்லி வழி அனுப்புவார்கள்.
இடையூறு கிடையாது :
நெகிழ்ச்சியான தருணம் :
நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன் என்பதால் கைகளை கூப்பி வணங்குவது எனக்கு பழக்கம் இல்லாத ஒன்று. அதனால் நான் என்னுடைய பாணியில் தலையை குனித்து அவர்களுக்கான மரியாதையை கொடுப்பேன். அவர்களின் அன்பை பார்த்து நான் நெகிழ்ந்து போனேன். அந்த நினைவுகள் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது என பகிர்ந்து இருந்தார் அமீர் கான்.