ரஜினி சாருக்கு உடம்பு சரி இல்லனு... அவரே என்ன நடிக்க சொல்லி கேட்டாரு? ஆனால்.. அமீர் கான் பகிர்ந்த தகவல்!

ரஜினி சாருக்கு உடம்பு சரியில்லை, என்பதால் இயக்குனர் ஷங்கர் 2.0 படத்தில் என்னை நடிக்க சொன்னதாகவும் ஆனால் அந்த வாய்ப்பை மறுத்து விட்டதாக அமீர் கான் கூறியுள்ளார்.

Continues below advertisement

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் முதலில் நான் நடிக்க வேண்டி இருந்தது. இயக்குநர் ஷங்கர் என்னை தான் முதலில் அந்தப் படத்தில் நடிக்க சொன்னார் என்று நடிகர் அமீர் கான் பேசியிருக்கிறார்.

Continues below advertisement

பிரம்மாண்ட இயக்குநர் என்று சொல்லப்படும் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த படம் தான் 2.0. எந்திரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் காம்பினேஷனில் மீண்டும் வெளியான படம் தான் 2.0. இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். ரூ.600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.800 கோடி வரையில் வசூல் குவித்தது. 2018 ஆம் ஆண்டு அதிக வசூல் குவித்த் படம் என்ற சாதனையை 2.0 படம் பெற்றது.


இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் முதலில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. அதுவும், ரஜினிகாந்த் சார் மூலமாகத்தான் வந்தது. ரஜினி சார் எனக்கு உடம்பு சரியில்லை. அதனால், நீங்கள் அமீர் கானை வைத்து படம் பண்ணுஙக் என்று இயக்குநர் ஷங்கர் சாரிடம் சொல்லிவிட்டார். இதையடுத்து இயக்குநர் ஷங்கர் சார் எனக்கு போன் பண்ணி நீங்கள் நடிக்க வேண்டும், ரஜினி சார் உங்கள் பெயரை சொல்லியிருக்கிறார் என்னிடம் சொன்னார்கள். 

ஆனால், உணர்ச்சிப்பூர்வமாக அந்த கதாபாத்திரத்தை நான் யோசித்து பார்த்தேன். அப்போது எனக்கு ரஜினி சார் அந்த கதாபாத்திரத்தில் தெரிந்தார். நான் யோசிக்கும் போது கூட என்னால் அந்த ரோலில் என்னை வைத்து பார்க்க முடியவில்லை. அதனால், நான் ஷங்கர் சாரிடம் இந்த ரோலில் ரஜினி சாரால் மட்டும் தான் நடிக்க முடியும், வேறு யாராலயும் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். என்னால், அந்த ரோலில் நடிக்க முடியாது. அப்படி இல்லையென்றால் நீங்கள் வேறு யாராவது வைத்து பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டேன் என்று அமீர் கான் பேசியிருக்கிறார்.


பின்னர் ரஜினிகாந்த் உடல்நலம் தேறி வந்த பின்னர், அவரையே வைத்து இயக்குனர் ஷங்கர் 2.0 திரைப்படத்தை இயக்கி முடித்தார். தற்போது ரஜினிகாந்த் மற்றும் அமீர் கான் இருவரும் கூலி படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola