தனியார் மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்த பிரஜன் பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வெறியும் போராடி வந்தவருக்கு இப்போது தான்  வாய்ப்பு கிடைத்துள்ளது. சின்னத்திரையில் சில தொடர்களில் நடித்து வந்தவருக்கு, சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் கனவாகவே  இருந்துள்ளது. அந்த கனவு தற்போது D3 திரைப்படம் மூலம் நிஜமாகியுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. 


 




உண்மை சம்பவத்தின் பின்னணி :


பீமாஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஜேகேஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஸ்ரீஜித் எடவானா. வித்யா பிரதீப் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரே நாளில் நடக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரில்லர் படம். சமீபத்தில் தான் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டார் இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி. 


 






 


ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா :


D3 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜி. மோகன், எம்.பி விஜய் வசந்த், எம்.பி. ஜெயக்குமார், எம்.எல்.ஏ. செல்வா பெருந்தகை, எம்.எல்.ஏ. ரூபி மனோகர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு D3 படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டனர். 


 



 


ஒரே நாளில் நடக்கும் சம்பவத்தை படமாக்கும் திரைப்படங்கள் என்றுமே தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும். அதற்கு கிடைக்கும் வரவேற்பே இரு மாதிரி இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் பகுதில் நடைபெற்றுள்ளது. வெளியாகியுள்ள D3 படத்தின் டிரெய்லர் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. இதன் மூலம் படம் தொடக்கம் முதல் இறுதி வரை ஸ்வாரஸ்யமாக நகரும் என்பது தெரிகிறது. ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் காட்சிகள் பாராட்டை பெரும். 


 






 


ஒரு நாள் இரவு நடைபெறும் திரில்லிங் கதையை மிகவும் சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார் அறிமுக இயக்குனர் பாலாஜி. திரில்லர் திரைப்படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இப்படம் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்பது படக்குழுவினரின் எதிர்பார்ப்பு.