ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் கில்லர்
10 ஆண்டுகளுக்குப் பின் எஸ்.ஜே சூர்யா திரைப்பட இயக்கத்திற்கு திரும்பியுள்ளார். ஶ்ரீகோகுலம் மூவீஸ் மற்றும் எஞ்சல் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.ஜே. சூர்யா தயாரித்து நடிக்கிறார். படத்தின் டைட்டில் கில்லர் என்றால் இது ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமுள்ள ரொமாண்டி த்ரில்லர் படமாக இருக்கும் என எஸ்.ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.
அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அன்ஸாரி இந்த படத்தில் நாயகி நடிக்கிறார். கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். நியு , அன்பே ஆருயிரே படத்தைத் தொடர்ந்து தமிழில் மூன்றாவது முறையாக ஏ. ஆர் ரஹ்மான் எஸ் ஜே சூர்யா கூட்டணி மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் வெளியான பாடல்களுக்கு இன்றளவும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் கில்லர் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வாலி , குஷி போன்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த எஸ்.ஜே சூர்யாவின் இயக்கத்தைப் பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்